திலீப் குமார் மறைவு ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்துக்குமே பேரிழப்பு! முதலைச்சர் ஸ்டாலின் இரங்கல்.!

By manimegalai aFirst Published Jul 7, 2021, 5:32 PM IST
Highlights

பழம்பெரும் நடிகர் திலீப் குமார் மறைவு, ஒட்டு மொத்த பாலிவுட் திரையுலகையே அதிர்ச்சியாக்கிய நிலையில், இவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 

பழம்பெரும் நடிகர் திலீப் குமார் மறைவு, ஒட்டு மொத்த பாலிவுட் திரையுலகையே அதிர்ச்சியாக்கிய நிலையில், இவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

98 வயதாகும் நடிகர் திலீப் குமார் சமீப காலமாகவே, வயது மூப்பு மற்றும் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி அன்று, மூச்சுத்திணறல் காரணமாக மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை உயிரிழந்தார், பாலிவுட் திரையுலகின் சகாப்பதமாக பார்க்கப்படும் இவரது மறைவுக்கு, பல பாலிவுட் பிரபலங்கள் நேரில் வந்து தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

மேலும், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம், பாரத பிரதமர் மோடி, ராகுல் காந்தி,  பல்வேறு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின், ட்விட்டர் பதிவு மூலம் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... "இந்தியத் திரையுலகின் ஜாம்பவானும் திரை வழியே மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தவருமான நடிகர் திலீப் குமார் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்துக்குமே பேரிழப்பு. என்னுடைய சார்பிலும் தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் திலீப் குமார்,  தாதா சாஹேப் பால்கே விருதை பெற்றவர். மேலும் அதிக விருதுகளை பெற்ற நடிகர் என கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

click me!