நடிகை ரோஜாவின் கணவரும், இயக்குனருமான ஆர்.கே.செல்வமணிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே.செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு ஆகியோர், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது பைனான்சியர் போத்ரா குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போத்ரா அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். போத்ரா மறைந்த பின்னர் அந்த வழக்கை அவரது மகன் நடத்தி வந்தார்.
இந்த வழக்கு 15-வது மாஜிஸ்திரேட் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.கே.செல்வமணி ஆஜராகவில்லை. அவர் சார்பில் வழக்கறிஞரும் ஆஜராகவில்லை என்பதால் ஆர்.கே.செல்வமணிக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை வருகிற செப்டம்பர் 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்.... தங்கத் தாமரை மகளே.. சிக்கென்ற கோல்டன் கலர் ஆடையில் சமந்தா - ஹார்டின் போட்டு அன்பை அள்ளிதெறிக்கும் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த ஆர்.கே.செல்வமணி தற்போது தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சியின் தலைவராக பதவி வகித்து வருகிறார். அவரது மனைவி ரோஜா, ஆந்திர மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் எம்.எல்.ஏ.வாக இருப்பதோடு, அம்மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.... ஜெயிலர் பட வசூல் சாதனை எல்லாம் சல்லி சல்லியா நொறுங்கப்போகுது... ஆத்தாடி செப்டம்பரில் இத்தனை படங்கள் ரிலீஸா?