காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் நான்கு முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வரும் திரைப்படம் 'செக்கச்சிவந்த வானம்' இந்த படத்தின் டிரைலர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.
காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் நான்கு முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வரும் திரைப்படம் 'செக்கச்சிவந்த வானம்' இந்த படத்தின் டிரைலர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.
இந்த டிரைலர் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்:
ஆரம்பமே அசத்தல்... இன்னைக்கு இருக்கும் கிரிம்னலுக்கு நிறைய பெயர் இருக்கிறது என ஒரு சிறு முன்னறிவிப்போடு தொடங்கிறது டிரைலர். பின் தொழிலதிபர், கல்வி தந்தை, ரியல் எஸ்ட்டே கிங் பின், மணல் மாபிஃபியா, என கூறியதும் 'சேனாபதி' என்கிற பெயர் வரும் போது நடிகர் பிரகாஷ் ராஜ் காட்டப்படுகிறது.
இந்த படத்தில் நடிகை அதிதி ராவ் ரிபோர்டராக நடித்துள்ளார். 10 நியூஸ் என்னும் தொலைக்காட்சியில் வேலை செய்பவராக வரும் இவர் சேனாபதி யார் பல கேள்விகள் எழுப்புவது காட்டப்பட்டுள்ளது.
மேலும் டிரைலர் இடை இடையே பாம்பிளாஸ்ட், துப்பாக்கி தோட்டாக்கள் வெடிக்கிறது. அதே போல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் தியாகராஜன் நடிதுள்ளார். அவரும் ஒரு தாதா வேடத்தில் நடித்திருக்கலாம் என்பது அவர் பேசும் வசனங்கள் மூலம் தெரிகிறது.
ஹீரோக்களை டிரைலரிலேயே ஹை லைட் செய்துள்ளார் மணிரத்னம். வரதன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள அரவிந்சாமி பிரகாஷ் ராஜின் மூத்த மகனாக நடித்துள்ளார். இவருக்கு காதலியாக நடிகை அதிதி வருகிறார். ஜோதிகா மனைவியாக நடிக்கிறார் என்று தெரிகிறது.
பிரகாஷ்ராஜியின் இரண்டாவது மகன் தியாகுவாக அருண் விஜய் நடித்துள்ளார். பின் இவருடைய காதலியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு இலங்கை பெண்ணாக நடிக்கிறார் என அவர் பேசுவதில் இருந்து புரிகிறது. மேலும் அருண் விஜயை பற்றியும் அவருடைய குணம் பற்றியும் கூறுகிறார். ஜோதிகா இது பெரியவர் சீட் என கூற, அண்ணனிடம் சொல்ல வேண்டாம் என திமிராகவும் நடந்து கொள்கிறார் அருண் விஜய்.
அடுத்ததாக எத்தியாக நடித்துள்ள சிம்பு இன்ட்ரோ கொடுக்கிறார். வெளிநாட்டில் திருமணம் செய்து கொண்டு அந்தபெண்ணை வீடிற்கு அழைத்து வராமல் வந்திருக்கிறார். ஏன் கூட்டி கொண்டு வரவில்லை என அவருடைய அம்மா கேட்க பெரியவருக்கு என்ன பிடிக்கும் என தெரியவில்லை என இவர் கூறுவது, அனைவரும் பிரகாஷ்ராஜ் மீது வைத்திருக்கும் மரியாதை தெரிகிறது.
சொந்த அண்ணனையே துப்பாக்கி வைத்து மிரட்டும் சிம்பு கெத்து வேற லெவல்.
அடுத்த இன்றோ ரசூல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி. எடுத்ததுமே "எப்படியா நீ போலீஸ் காரணாக ஆன, அந்த பையன் செத்தா உன் யூனிபாம்ம குழி தோண்டி புதச்சிடனும் என, விஜய் சேதுபதியை நிக்க வைத்து மிரட்டும் உயர் அதிகாரிகள். அரவிந்த் சாமிக்கு நண்பராக நடித்துள்ளார்.
ஒரே காரில் நான்கு ஹீரோக்களின் சேஸிங் சூப்பர். மொத்தத்தில் அடி தடி, எதிர்பாராத திருப்பங்கள் என படத்தில் ஒவ்வொரு நிமிடமும் ரசிகர்களை கண் சிமிட்ட விடாமல் ரசிக்க வைக்கும் என தெரிப்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் டிரைலர் மாஸாக உள்ளது என ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.