'கனா' நெருப்புடா நெருங்குடா என 'கபாலி' படத்திற்கு தன் பாடல் வரிகளாலும், குரலாலும் வலிமை சேர்த்த அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கும் முதல் திரைப்படம்.
'கனா' நெருப்புடா நெருங்குடா என 'கபாலி' படத்திற்கு தன் பாடல் வரிகளாலும், குரலாலும் வலிமை சேர்த்த அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கும் முதல் திரைப்படம்.
பல பேட்டிகளில் தன்னுடைய இயக்குனர் ஆசையை வெளிப்படுத்தி வந்த இவர், தற்போது நண்பன் சிவகார்த்திகேயன் கொடுத்த வாய்ப்பை மிகக்கச்சிதமாக பயன்படுத்தி கொண்டுள்ளார் என்று தான் தோன்றுகிறது.
இதற்க்கு சான்று இவரின் கதை தேர்வு, கிரிக்கெட் விளையாட்டு என்றாலே கையில் பேட், பாலுடன் கண் முன்னே தோன்றும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை தாண்டி பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை கருவாக தேர்வு செய்து, கிரிக்கெட் விளையாட்டு மீது அதிக ஆர்வம் காட்டும் ஒரு கிராமத்து பெண், தன்னுடைய கஷ்டங்களை கடந்து எப்படி சாதிக்கிறார் என்பதே இந்த படத்தின் கதை.
கதைக்கு ஏற்ற போல் நாயகியை கச்சிதமாக தேர்வு செய்துள்ளார் அருண்ராஜா. மேலும் இந்திய அளவில் முதல் முறையாக பெண் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் என்கிற பெருமையும் இந்த படத்தையே சேர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை சத்தியம் திரையரங்கில் இந்த படத்தின், இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீடு நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், இயக்குனர் அருண் ராஜா காமராஜ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இசையமைப்பாளர் டி.இமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
டிரைலர்:
மகள் ஐஸ்வர்யா ராஜேஷ் கனவான கிரிக்கெட் விளையாட்டில் ஜெயிக்க உறுதுணையாக இருக்கும் தந்தையாக சத்தியராஜ். ' கிராமத்து பிள்ளைகள் கிரிக்கெட் விளையாட கூடாது என கூறும் மக்கள். அதையும் மீறி சிலர் இவரது கனவை புரித்து கொள்வது...
ஆசைப்பட்டா மட்டும் பத்தாது, அடம்பிடிக்க தெரியணும் என்கிற வசனம் ஆணித்தனமாக பார்க்கும் அனைவர் மனதிலும் பதிகிறது. இந்த படத்தில் இதுவரை பார்க்காத ஐஸ்வர்யா ராஜேஷை வெளிக்கொண்டு வந்துள்ள இயக்குனர்.
இதனால் காக்கா முட்டை படத்தில் எப்படி தன்னுடைய நடிப்பால் அனைவர் மனதிலும் இடம்பிடித்தாரோ ஐஸ்வர்யா ராஜேஷ் அதே போல் இந்த படத்தில் தன்னுடைய கடின உழைப்பால் அனைவரையும் கவர்வார் என எதிர்ப்பார்க்கலாம்.