பத்து வருடங்களாக தலைமறைவாக இருந்த அஜீத்-ஷாலினி ஜோடியின் காதல் தூதர்...மறுபடியும் வந்தார்...

Published : Jan 04, 2019, 11:18 AM ISTUpdated : Jan 04, 2019, 11:40 AM IST
பத்து வருடங்களாக தலைமறைவாக இருந்த அஜீத்-ஷாலினி ஜோடியின் காதல் தூதர்...மறுபடியும் வந்தார்...

சுருக்கம்

‘காதல் மன்னன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தொடர்ந்து ஹிட் படங்களாக இயக்கி வந்த சரண் கமலை வைத்து ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ படம் இயக்கியவர். தன் படத்தின் ஜோடிகளாக இருந்த அஜீத், ஷாலினியை காதலர்களாக மாற்றி அவர்களது திருமணத்துக்கே காரணமாக இருந்தவர்.

2009ம் ஆண்டு முதல் சுமார் பத்து வருடங்களாக திரையுலகை விட்டே ஒதுங்கியிருந்த இயக்குநர் சரண் மீண்டும் படம் இயக்கத்துவங்கியுள்ளார். இச்செய்தியை அவரது பட நாயகன் ‘பிக் பாஸ்’ ஆரவ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

‘காதல் மன்னன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தொடர்ந்து ஹிட் படங்களாக இயக்கி வந்த சரண் கமலை வைத்து ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ படம் இயக்கியவர். தன் படத்தின் ஜோடிகளாக இருந்த அஜீத், ஷாலினியை காதலர்களாக மாற்றி அவர்களது திருமணத்துக்கே காரணமாக இருந்தவர்.

வசூல்ராஜாவுக்குப் பின்னர் தயாரிப்பாளராகவும் மாறி இவர் இயக்கிய படங்கள் தொடர்ந்து தோல்விகளைத் தழுவியதால் கடன் சுமைகளுக்கு ஆளாகி,  மெல்ல சினிமாவை விட்டு ஒதுங்கினார். அந்த பத்து வருட இடைவெளியில் அவர் இயக்கிய ’ஆயிரத்தில் இருவர்’ படமும் அட்டர் ஃப்ளாப் ஆகவே, சினிமாவை விட்டு சுத்தமாக ஒதுங்கினார்.

இந்நிலையில், தனது வசூல்ராஜா; பட டைட்டிலை ஞாபகப்படுத்தும் விதமாக ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ என்ற படத்துடம் மீண்டும் களம் இறங்குகிறார்.இதில் ஆரவ் மார்க்கெட் ராஜாவாக டான் கதாபாத்திரத்தில் வருகிறார். ஆரவ் ஜோடியாக காவ்யா தபூர் தமிழில் அறிமுகமாகிறார். ராதிகா சரத்குமார், நாசர், யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, சாம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சிமோன் கே.கிங் இசையமைக்கும் இந்த படத்திற்கு கே.வி.குகன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இவர் சரணின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிறுத்தை சிவா போலவே அஜீத்தை வைத்து ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, 'அசல்’,‘அட்டகாசம்’ ஆகிய நான்கு  படங்களை இயக்கியவர் சரண்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Thalaivar Thambi Thalaimaiyil: பாக்ஸ் ஆபீஸ்ல இனி தம்பியோட ஆட்டம் தான்! மிரள வைக்கும் 10 நாள் வசூல் நிலவரம்!
Pandian Stores 2 Promo: சக்திவேலின் திட்டம் பலித்தது! பாண்டியன் குடும்பத்தில் வெடித்த புது பஞ்சாயத்து! பாண்டியன் ஸ்டோர்ஸில் இனி வரும் வாரங்கள் ரணகளம்!