
பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களுக்கான தியேட்டர் புக்கிங்குகளுக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும்போட்டி ஏற்பட ஆரம்பித்துள்ளதாகவும், இதனால் தியேட்டர் அட்வான்ஸ் கிடைப்பதில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவுகின்றன.
எல்லாவற்றிலும் முந்திக்கொண்டு வரும் ‘பேட்ட’ படத்தின் ரிசர்வேசன், ஐந்து நாட்களுக்கு முன்னதாக நாளையே துவங்குகிறது. விஸ்வாசம் வழக்கம்போல் நாளை மறுநாள் துவங்கலாம். இந்நிலையில் இரு பட விநியோகஸ்தர்களுக்கும் இடையே அதிக தியேட்டர்கள் எடுப்பதில் பலத்த போட்டி இருப்பதாகவும் இரு தரப்புமே அதிக தியேட்டர்கள் எடுப்பதற்கு துடிப்பதால் வழக்கமாக தியேட்டர்களிலிருந்து கிடைக்கும் அட்வான்ஸ் பணம் பெருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
வழக்கமாக அஜீத் ,ரஜினி படங்களை அள்ளி அள்ளி முன்பணம் வழங்கும் தியேட்டர் உரிமையாளர்கள் தியேட்டர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடும் கிராக்கியால் மிகக் குறைவான தொகையே தர முன்வந்திருக்கிறார்களாம்.
தமிழகத்தில் உள்ள 1130 தியேட்டர்களில் இன்றைய நிலவரப்படி ‘பேட்ட’ படம் சுமார் 600 முதல் 650 தியேட்டர்களிலும், ‘விஸ்வாசம்’ சுமார் 500 முதல் 550 தியேட்டர்களிலும் ரிலீஸாகும் வாய்ப்பே உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.