அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் உருவி பாட்ஷா டைப்ல எடுக்கப்பட்ட பேட்ட... லீக்கானது கதை!

By sathish kFirst Published Jan 4, 2019, 10:31 AM IST
Highlights

யதார்த்த ஃபைட் எனும் ஸ்டைலை மாற்றிவிட்டு, மீண்டும் தனது பழைய டைப் அடித்து அந்தர் செய்யும் ஆக்‌ஷனுக்கு மாறியிருக்கிறார்!

நடுத்தர வயதை தாண்டிய நிலையில், ரெண்டு மூணு வருடங்களுக்கு ஒரு படம் தான் கொடுத்தார் ரஜினி. அவை அநேகமாக சூப்பர் டூப்பர் ஹிட்டுகளாக அமைந்தன. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை வந்தாலும் கூட தோற்றத்தில், கதையில், கேரக்டரில் பெரிய வித்தியாசங்கள் இருக்காது. 

வெள்ளந்தியான ரஜினி துரோகத்துக்கு உள்ளானதால் அதை தீர்க்க அதிரடி அவதாரமெடுப்பார்! தனது நெருங்கிய உறவோ அல்லது நண்பனோ கொல்லப்பட்டுவிட அதற்கு பழியெடுக்க கிளம்புவார்!...பொதுவாக இப்படியான கதைகள்தான் ரஜினியின் படங்களாக இருக்கும். மாஸ் மசாலா, தட்டையான நகைச்சுவை, அசத்தல் மியூஸிக்  ஆல்பம் பின்னே நான்கு அதிரடி சண்டைக்காட்சிகள் ! என்று அவையும் பக்கா ஃபிட்டாக களமிறங்கி பாக்ஸ் ஆபீஸை பதம் பார்க்கும். 


ஆனால்! வயதான நிலையை அடைந்துவிட்ட ரஜினி, கடந்த சில வருடங்களாக வருடத்துக்கு ரெண்டு மூன்று படம் நடிக்குமளவுக்கு மாறிவிட்டார். அதுவும் அவரது படங்களில் இப்போது கதைகள் காணப்படுகின்றன, தலைவனின் கெட் அப் மாறுகிறது, சண்டையற்ற நிலையோ அல்லது கிளைமேக்ஸ் சண்டையோடோ படம் நிறைவடைகிறது. இதனாலோ என்னவோ கடந்த சில படங்கள் ரஜினிக்கு வர்த்தக ரீதியில் கைகொடுக்கவேயில்லை. 

அனிமேஷன் கோச்சடையான், ஒடுக்கப்பட்டோர் வாழ்வியலை சொன்ன கபாலி, புரட்சிகர காலா, டெக்னாலஜியின் உச்சம் தொட்ட 2.0 என எவையுமே ஹிட்டடிக்கவில்லை. விளைவு, பேட்ட படத்தில் ரஜினி மீண்டும் தனது பழைய ஃபார்மூலாவுக்கு மாறியிருக்கிறார் என்கிறார்கள். ரஜினியின் வெறித்தன விசிறியான கார்த்திக் சுப்புராஜ், இந்தப் படத்துக்காக கமிட் செய்யப்பட்டபோதே ‘எங்களுக்கு பக்கா மசாலா ரஜிப்படம்தான் வேணும்’ என்றது சன் குரூப். அதைத்தான் தந்திருக்கிறார் அவர்! என்கிறார்கள். 

இன்னும் பத்து நாட்களில் பேட்ட ரிலீஸாகும்  நிலையில்,இப்போது கோடம்பாக்கம் வட்டாரத்தில்  அப்படத்தின் ஒன்லைன் கதை இதுதான் என்று ஒரு தகவல் வலம் வருகிறது....


“ஃபிளாஸ்பேக்கில், ரஜினியும், சசிக்குமாரும் நண்பர்கள். முஸ்லீமான சசி, இந்துப் பெண்ணைக் காதலிக்கிறார். இதில் கடுப்பாகும் பெண் வீட்டார் கூலிப்படையை வைத்து சசியை கொன்றுவிடுகிறார்கள். உயிர் நண்பனின் உயிரைப் பறித்தவர்களை  ஒவ்வொருவராக தேடிப் பிடித்து கருவறுக்கிறார் தலைவர். அந்த காட்சிகள் அனைத்தும் பழைய ஆக்‌ஷன் அரசன் ரஜினியை மீண்டும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும்!” -    இதுதான் கதையின் உள் முடிச்சு! என்கிறார்கள். 

கோலிவுட்டிம் ஜூனியர் இயக்குநர்கள் தரப்பில் இருந்துதான் இந்த தகவல் கிளம்பியிருக்கிறது. ரஜினியின் சினிமா வாழ்வில் மட்டுமல்ல, மசாலா தமிழ்சினிமாவின் டைரியில் கல்வெட்டு போல் அமைந்த படம்தா ‘பாட்ஷா’. அதிரிபுதிரி ஆல்ரவுண்ட்ஸ் ஹிட்டடித்த இந்தப் படத்தின் கதையும் இந்து - முஸ்லீம் ஒற்றுமை கதைதான். அதையேதான் இந்தப் படத்திலும் இந்து ரஜினி, முஸ்லீம் சசி மூலமாக கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தப் படம் ரஜினிக்கு இன்னொரு பாட்ஷாவாக அமையும்! அதனால்தான் இந்தப்படத்திலும், பாட்ஷா போலவே ரஜினியின் ஒரு கெட்-அப்பும், சில போட்டோக்களும் அமைந்துள்ளன! என்கிறார்கள். 


 
பேட்ட- கதை இதுதான் என கிளம்ப, பதறிவிட்டது தயாரிப்பு தரப்பு. இயக்குநர் கார்த்திக் உத்தரவின் பேரில் அசோஸியேட் இயக்குநர் ஒருவர் டைப் செய்து தர, ஒரு டீமே இதற்கு மறுப்பு தெரிவித்து ‘இது பேட்ட கதையே கிடையாது.’ என்று வாட்ஸ் அப் தகவல் ஒன்றை பரப்பி வருகிறார்கள். 

அதேபோல் சினிமா விமர்சகர்களும், பரவும் கதை போல் பேட்ட கதை இருக்க வாய்ப்பில்லை. காரணம், டீசரில் உள்ள சீன்கள் சொல்ல வரும் கதை வேறு மாதிரி இருக்கிறது. ஊட்டியிலுள்ள ஒரு கல்லூரியின் வார்டனாக ரஜினி வருகிறார், இளைஞர்களை தவறான பாதையில் வழி நடத்தும் ஒரு டீமுக்கு எதிராக அந்த வார்டனின் அதிரடி போராட்டம், வெளுத்தெடுப்பு போல் உள்ளது  படத்தின் கதை. ஒரு பிளாஸ்பேக் இருக்கிறது, அதில் ரஜினியும் - சசியும் நண்பர்கள், த்ரிஷாவின் போர்ஷனும் இதில்தான் வருகிறது. 

ஆனால் இப்போது பரவிக் கொண்டிருக்கும் தகவல் போல், ரஜினி இந்தப் படத்தில் மீண்டும் தனது பழைய அதிரடி ஃபார்மூலாவுக்கு மாறியிருப்பது உண்மையாகிறது. யதார்த்த ஃபைட் எனும் ஸ்டைலை மாற்றிவிட்டு, மீண்டும் தனது பழைய டைப் அடித்து அந்தர் செய்யும் ஆக்‌ஷனுக்கு மாறியிருக்கிறார்! என்பது புலனாகிறது! ரஜினி மீண்டும் தன்னை பாக்ஸ் ஆபீஸ் டார்லிங்காக நிலைநிறுத்திக் கொள்ள இந்த ட்ரிக்கை கையில் எடுக்கிறார்...என்கிறார்கள். 

ஹும் எது எப்படியோ இன்னும் சில நாட்களில் படம் வெளிவந்ததும் தெரியப்போகிறது, அவர் மீண்டும் வசூல் மன்னனாகிறாரா இல்லையா என்று!

click me!