திரையரங்கங்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறையை அறிவித்த மத்திய அரசு..!

By manimegalai aFirst Published Oct 6, 2020, 7:04 PM IST
Highlights

இந்நிலையில், கடந்த சில மாதமாக அதிகப்படியான தளர்வுகளை அறிவித்து வரும், மத்திய மாநில அரசுகள், அக்டோபர் 15 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்து இருக்கிறது. 
 

கொரோனா பிரச்சனையால்  திரைத்துறை கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. திறக்கபடாத தியேட்டர்கள், முழுவதுமாக முடிந்த பிறகும் திரைக்கு வர முடியாத திரைப்படங்கள், பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படப்பிடிப்பு என பல பிரச்சனைகள் சுழட்டி அடிக்கிறது. கடன் வாங்கி படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பலரும் கொஞ்சமாவது சம்பளத்தை குறைத்துக்கொள்ளுங்கள் என டாப் ஹீரோ, ஹீரோயினுக்கு கோரிக்கை வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

மறுபுறமே தியேட்டர் உரிமையாளர்களின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. அதாவது தியேட்டர்களை நம்பி பிழைத்து வரும் 10 லட்சம் குடும்பங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என முதலமைச்சரிடம் கதறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

கடந்த மார்ச் மாதம் முதல் மிட்ட தட்ட 6 மாதத்திற்கு மேலாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் உள்ளதால், பொன்மகள் வந்தாள், பெண் குயின், ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியானது. மேலும் சூர்யாவின் சூரரை போற்று, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் போன்ற பல படங்கள் ஆன்லைனில் வெளியாக உள்ளது என அறிவித்துள்ளனர். இந்த  அறிவிப்புகள்  தியேட்டர் உரிமையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 

இந்நிலையில், கடந்த சில மாதமாக அதிகப்படியான தளர்வுகளை அறிவித்து வரும், மத்திய மாநில அரசுகள், அக்டோபர் 15 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்து இருக்கிறது. 

இந்நிலையில் தற்போது திரையரங்கங்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளையும் தற்போது மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. 

இந்த குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “திரையரங்கு முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்கும் முன்பாக முழுமையாக மீண்டும் கிருமி நாசினி போட்டு சுத்தம் செய்வது அவசியம். ஒவ்வொரு பார்வையாளர்களும்  இருக்கை இடைவெளி விட்டு அமர வேண்டும். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். 

மொத்த இருக்கையில் 50% பார்வையாளர்கள் மட்டுமே படம் பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் பார்வையாளர்கள் முகக்கவசத்தை எப்போதும் அணிந்திருக்க வேண்டும். ஒரேயொரு திரை மட்டுமேயுள்ள திரையரங்குகள் டிக்கெட் கவுண்டர்களை திறந்து கொள்ளலாம். ஆனாலும் ஆன்லைன் புக்கிங் மட்டுமே ஊக்குவிக்கப்படுகிறது. தியேட்டருக்குள் காற்றோட்ட வசதி முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். அனைத்து குளிரூட்டப்பட்ட திரையரங்குகளும் அரங்கினுள் 23 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்ப நிலையை பராமரிப்பது அவசியம்” எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதனால், கிட்ட தட்ட 6 மாதத்திற்கு மேல், எந்த திரையரங்கங்களும் திறக்கப்படாமல் இருந்த நிலையில் மீண்டும் திரை அரங்குகள் திறக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
 

click me!