முதல் முறையாக பிக்பாஸ் வீட்டில் கண் கலங்கிய அனிதா சம்பத்! என்ன ஆச்சு..?

Published : Oct 06, 2020, 01:49 PM IST
முதல் முறையாக பிக்பாஸ் வீட்டில் கண் கலங்கிய அனிதா சம்பத்! என்ன ஆச்சு..?

சுருக்கம்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒரே நாளில் ஓஹோ என விமர்சனங்களை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. முதல் நாளில் இருந்தே சுவாரஸ்யமாக செல்வதால், வரும் நாட்களில் எதிர்பாராத பல திருப்பங்கள் இந்த நிகழ்ச்சியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒரே நாளில் ஓஹோ என விமர்சனங்களை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. முதல் நாளில் இருந்தே சுவாரஸ்யமாக செல்வதால், வரும் நாட்களில் எதிர்பாராத பல திருப்பங்கள் இந்த நிகழ்ச்சியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில்... யாரும் எதிர்பாராத போட்டியாளரான அனிதா சம்பத், முதல் முறையாக கண்கலங்கி அழுதுள்ளார்.

அதாவது நேற்று போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதாவது ஒவ்வொரு போட்டியாளரும் நான்கு பேரை தேர்வு செய்து, இருவருக்கு ஹார்ட் மற்றும், மற்ற இருவருக்கு ஹார்ட் ப்ரோகென் கொடுக்க வேண்டும். நேற்றைய தினத்தில், பலர் ஷிவானிக்கு ஹார்ட் ப்ரோகென் கொடுக்கு அவரது இதயத்தை உண்மையிலேயே நொறுக்கி விட்டனர்.

அந்த கேம் இன்றும் தொடர்கிறது. அந்த வகையில் அனிதா சம்பந்த், நிஷாவை அழைத்து அவருக்கு ஹார்ட் கொடுக்கிறார். அப்போது பேசும் அவர், நிஷா அக்காவை பார்த்தால் என்னுடைய அம்மாவை போல் உள்ளது. தன்னுடைய அம்மா மிகவும் கருப்பாக இருப்பாங்க, நகைகள் போடுவது என்றால் கூட தன்னை விட அது பளீச் என இருக்கும் என்பதால் போட மாட்டாங்க. அதே போல் பள்ளி, கல்லூரிகளுக்கு வர கூட தயங்குவாங்க. ஆனால் நிஷா அக்கா, தன்னுடைய நிறத்தையே ப்ளஸ்சாக மாற்றி காமெடியில் ஷைன் பண்ணுகிறார். இதனை தன்னுடைய அம்மா நிஷாவிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும் என கண் கலங்கியபடி கூறியுள்ளார்.

அந்த புரோமோ இதோ... 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!