
அக்டோபர் 4 ஆம் தேதி மிக பிரமாண்டமாக ஆரம்பமான, பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் நாளே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பானது. பிக்பாஸ் முதல் சீசனை பீட் பண்ணமுடியாது என்றாலும், கடைசி இரண்டு சீசன்களை விட, விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இந்த ஷோ நகர வேண்டும் என்பதே ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
பிக்பாஸ் வீட்டின் உள்ளே வந்தால், கவர்ச்சியால் கிறங்கடிப்பர் என எதிர்பார்த்த ஷிவானி, இரண்டாம் நாளே கலங்கி நிற்கிறார். மற்ற போட்டியாளர்களை விட, எப்போதும் தனிமையாகவே இவர் இருப்பதாக உணர்ந்த பலர், இவருடைய கையில் ஹார்ட் முத்திரையை பதித்து, இவரை ஓரம் கட்டினர்.
இதனால் துவண்டு போய் நிற்கும் ஷிவானியை, ஒரு அண்ணன் போல் அட்வைஸ் செய்து தேற்றுகிறார் ஆரி. உனக்கு இன்ஸ்டாகிராமில் எவ்வளவு ஃபேன்ஸ் இருகாங்க, நீ தினமும் போடும் ஒரு வீடியோவிற்கு பல ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும்... என ஆறுதலாக பேசுகிறார்.
ஷிவானி மனதில் சோகம் இருந்தாலும் அதனை துளியும் முகத்தில் காட்டி கொள்ளாமல், நான் இதனை கேம் போன்று விளையாடவில்லை நான் நானாகவே விளையாடுகிறேன் என கூறுகிறார். போகிற போக்கை பார்த்தால் ஷிவானிக்கு தான் முதல் முதலில் ஆர்மி துவங்கி ரசிகர்கள் ஆதரிப்பார்கள் போலவே...
தற்போது வெளியாகியுள்ள புரோமோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.