
இளையராஜாவின் இசையில் உருவாகும் ''காதல் செய்'' படத்திற்கு தணிக்கை குழு தடை விதித்துள்ளது. தமிழ் சினிமாவில் கலவையான வரவேற்பை பெற்ற போர்க்களத்தில் ஒரு பூ படத்தின் இயக்குனர், கு. கணேசன், இயக்கத்தில், புதுமுகங்கள் சுபாஷ் சந்திரபோஸ் ,நேஹா ஜோடியாக நடிக்கும் படம் காதல் செய். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று, இசையமைப்பாளர் இளையராஜாவின் ஸ்டூடியோவில் நடந்தது.
இசைஞானி இளையராஜா:
தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவானும் ஆன இசைஞானி , 40 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய பயணத்தை தொடர்கிறார். இவருடைய இசை மழையில் பட்டி, தொட்டி எங்கும் நனைய ஏராளமான ரசிகர்கள் இவரை சூழ்ந்து கொண்டனர். இதுவரை, கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக இளையராஜா பணியாற்றி உள்ளார். இவரது இசையில் தற்போது காதல் செய் படம் தயாராகி உள்ளது.
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இளையராஜா உருக்கம்:
இந்த படத்தின், டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று, இசையமைப்பாளர் இளையராஜாவின் ஸ்டூடியோவில் நடந்தது. விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, பி.வாசு உள்பட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அவர் பேசும் போது, இந்தப் படத்தை எடுக்க அவ்வளவு கஷ்டப்பட்டோம் என்றார். தொடர்ந்து அவர், “காலகாலத்துக்கும் இளையராஜா, பி.வாசு, பாரதிராஜா உருவாகிக்கொண்டே இருப்பர்களா என்றால் இல்லை. என்றைக்கும் ஒரே ஒரு இளையராஜா, பி.வாசு, பாரதிராஜாதான். உலகத்திற்கு ஒரே ஒரு சூரியன் இருப்பதுபோலத்தான் இதுவும் என்றார்.
காதல் செய் படத்திற்கு தணிக்கை குழு தடை:
இந்நிலையில், காதல் செய் திரைப்படத்திற்கு தணிக்கை குழு தடை விதித்துள்ள நிலையில், இது பற்றி பேசிய படத்தின் இயக்குனர் கு. கணேசன், ''போர்க்களத்தில் ஒரு பூ படம் எடுக்கும் போது என்னை நடத்திய விதம் பற்றி தணிக்கை குழுவிற்கு கடிதம் எழுதினேன். அதற்கு பழிவாங்கவே தணிக்கை குழு இந்த படத்தை தடை செய்துள்ளனர். இதனை நான் சட்ட ரீதியாக சந்திப்பேன்'' என்றார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.