Jai Bhim: சிக்கி தவிக்கும் சூர்யா - ஜோதிகா! அதிரடியாக 5 பேர் மீது... 8 பிரிவுகளின் கீழ் வழக்கு..!

By manimegalai aFirst Published Nov 23, 2021, 12:15 PM IST
Highlights

'ஜெய்பீம்' பட விவகாரம் நினைத்ததை விட, படு பயங்கரமாக வெடித்துக்கொண்டிருக்கிறது. தற்போது வன்னிய சங்க தலைவர் பு. தா.அருள்மொழி சிதம்பரம் நீதிமன்றத்தில் சூர்யா - ஜோதிகா உள்ளிட்ட 5 பேர் மீது அதிரடியாக வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'ஜெய்பீம்' பட விவகாரம் நினைத்ததை விட, படு பயங்கரமாக வெடித்துக்கொண்டிருக்கிறது. தற்போது வன்னிய சங்க தலைவர் பு. தா.அருள்மொழி சிதம்பரம் நீதிமன்றத்தில் சூர்யா - ஜோதிகா உள்ளிட்ட 5 பேர் மீது அதிரடியாக வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை மிகவும் கொடுமைக்காரர்களாக சித்தரித்துள்ள காட்சிகளுக்கு தொடர்ந்து பா.ம.கவினர் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்து, சூர்யாவிற்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே...

இந்நிலையில் இந்த படத்தில் எஸ்.ஐ-யாக வரும் அந்தோணி சாமியின் பெயர் திட்டமிட்டு குருமூர்த்தி என வைக்கப்பட்டுள்ளதையும் சுட்டிகாட்டிய அவர்கள், அக்னி கலசம் காலண்டர் இடம்பெற்ற காட்சிகளையும் குறிப்பிட்டு, மிகப்பெரிய பிரச்சனையாக கிளப்பினர். பின்னர் அது குறித்த காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டு, லட்சுமி காலண்டர் வைக்கப்பட்டது.

பின்னர் சூர்யா தரப்பில் இருந்தும், இயக்குனர் தரப்பில் இருந்தும் விளக்கம் கொடுத்த போதிலும் தொடர்ந்து இந்தப் பிரச்சினை இடியாப்ப சிக்கலாக சென்று கொண்டிருக்கிறது. 'ஜெய் பீம்' பிரச்சனை பற்றி எரிந்து வந்தாலும் தொடர்ந்து சூர்யா அமைதி காத்து வருவதால், பாமக அன்புமணி தரப்பிலிருந்து ரூபாய் 5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியது மட்டுமின்றி, 'ஜெய்பீம்' திரைப்படத்தை எந்த ஒரு மத்திய, மாநில அரசுகள் அரசு விருதுகளுக்கும் பரிந்துரைக்க கூடாது என  கூறி இருந்தது.

இதை தொடர்ந்து தற்போது வன்னியர் சங்க தலைவர் பு.தா அருள்மொழி, சிதம்பரம் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் நடிகர் சூர்யா, ஜோதிகா, இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட், இயக்குனர் தா.செ.ஞானவேல் மற்றும் 'ஜெய் பீம்' படத்தை வெளியிட்ட அமேசான் நிறுவனம் மீது அதிரடியாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம், 1860ன் பிரிவுகள் 153, 153 A (1) , 499, 500, 503, மற்றும் 504 ஆகியவற்றின் கீழ் குற்றங்களுக்கான, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 200 உடன் 199, 960 பிரிவின் கீழ் பதிவு வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

click me!