Bangarraju Teaser | நாக சைதன்யாவின் பிறந்த நாள் பரிசு ; 2வது முறை மகனுடன் இணைந்த நாகார்ஜுனா ; டீசர் உள்ளே !!

Kanmani P   | Asianet News
Published : Nov 23, 2021, 11:33 AM ISTUpdated : Nov 23, 2021, 11:49 AM IST
Bangarraju Teaser | நாக சைதன்யாவின் பிறந்த நாள் பரிசு ;  2வது முறை மகனுடன் இணைந்த நாகார்ஜுனா ; டீசர் உள்ளே !!

சுருக்கம்

இன்று பிறந்தநாள் கொண்டாடும், நாக சைதன்யாவின் பிறந்தநாள் பரிசாக  'Bangarraju' படத்தின் டீசரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். 

'Soggade Chinni Nayana'படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் படம் 'Bangarraju'. இந்த படத்தில் ரியல் தந்தை மகனான நாக அர்ஜுன் -நாகசைதன்யா தந்தை மகனாக நடித்துள்ளனர். இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது என்றே சொல்லலாம். 

'மனம்' படத்திற்குப் பிறகு நாகார்ஜுனாவும் அவரது மகன் அக்கினேனி நாக சைதன்யாவும் இரண்டாவது முறையாக 'பங்கர்ராஜூ' படத்திற்காக இணைந்து நடித்துள்ளனர். ரொமான்ஸ், ஆக்‌ஷன் என  ஒரு முழுமையான பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் இந்த திரைப்படம் விரைவில் மிகப்பெரிய வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

இதில் நாகார்ஜுனாவின் மனைவியாக பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணாவும், நாக சைதன்யாவின் காதலியாக 'உப்பென' புகழ் கிருத்தி ஷெட்டியும் நடிக்கின்றனர். அனுப் ரூபன்ஸ் ஒலிப்பதிவு செய்துள்ளார்.

 சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட முதல் சிங்கிள் 'லட்டுண்டா', 'Bangarraju' இசை ஆல்பத்திற்கான எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து தயாரிக்கிறது இந்த படத்தை தயாரிக்க  நாகார்ஜுனா தயாரிப்பாளராக உள்ளார். இதற்கு சத்யானந்த் திரைக்கதை எழுதியுள்ளார்

இன்று பிறந்தநாள் கொண்டாடும், நாக சைதன்யாவின் பிறந்தநாள்பரிசாக  'Bangarraju படத்தின் டீசரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆடம்பர கிராமத்து இளைஞராய் நாக சைதன்யா தோன்றும் இந்த டீசர் தெலுங்கு ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை உருவாக்கியுள்ளது. 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!