
சுப்பிரமணியபுரத்தில் பரமாவாக தோன்றிய சசிகுமார் இந்த படத்தை இயக்கி, சொந்த தயாரிப்பில் உருவாக்கி இருந்தார். வணிக மேலாண்மை படித்துள்ள சசிகுமார் தனது கனவான திரைக்கு வரும் போதே நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர் என முப்பரிமாணத்தோடுதான் நுழைந்தார். இதை தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் (2009) கருணாவாகவும் சசிகுமார் நடித்தார்.
இவர் தயாரிப்பில் உருவான முதல் படம் சுப்ரமணியபுரம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து பசங்க, ஈசன், பொறாலி, சுந்தரபாண்டியன், தலைமுறைகள், தாரை தப்பட்டை, அப்பா, கிடாரி, பல்லே வெள்ளையத்தேவா,கொடிவீரன் உள்ளிட்ட படங்களை சசிகுமார் தயாரித்துள்ளார்.
இதற்கிடையே கடந்த 2017ம் வருடம் நவம்பர் மாதம் பிரபல இயக்குனர் சசிகுமாரின் மைதுனரான அசோக் என்பவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பட தயாரிப்பு கனவால் கந்து வட்டி சித்திரவதைக்கு ஆளான அசோக் இது குறித்து கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டது சிறு தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
இதன்பிறகு பட தயாரிப்பில் அதிக ஆர்வம் காட்டாத சசிகுமார் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது நடித்துள்ள ராஜவம்சம் வரும் 26-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதை தொடர்ந்து பகைவனுக்கு அருள்வாய்,நா நா, அயோத்தி உள்ளிட்ட படங்களை சசிகுமார் தன் கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 'ராஜவம்சம்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சசிகுமார்; நான் ‘பேட்ட’ படத்தில் நடிக்கும்போது, ‘நீ என்ன வேண்டுமானாலும் பண்ணு... ஆனால், படம் மட்டும் தயாரிக்காத’ என்று ரஜினி சார் சொன்னார். அவர் கூறியதை நான் அப்போதே கேட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போது கேட்கிறேன்.
படம் தயாரிப்பில் உள்ள கஷ்டங்களை நான் பார்த்துள்ளேன் என்ற அனுபவத்தில் கூறுகிறேன், ஒரு படம் வெளியாகி அடுத்தடுத்த படங்கள் எடுக்க வேண்டும் என்றால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் தன்மை வேண்டும். இந்தப் படத்தில் நடித்த அனைவருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
1993-ல் வெளியான வள்ளி மற்றும் 2002-ல் திரைக்கண்ட பாபா உள்ளிட்ட படங்களை ரஜினிகாந்த் தயாரித்திருந்தார். ரஜினி நடிப்பில் வெளியான பாபா போதிய வரவேற்பை கொடுக்காமல் ரஜினிக்கு ஏமாற்றத்தை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.