Nikki galrani |எனது ஆசையை நிறைவேற்றிய படம் ராஜவம்சம் ; நிக்கி கல்ராணி ஓபன் டாக்; இப்படி ஒரு ஆசையா ?

Kanmani P   | Asianet News
Published : Nov 23, 2021, 06:48 AM ISTUpdated : Nov 23, 2021, 06:59 AM IST
Nikki galrani |எனது ஆசையை நிறைவேற்றிய படம் ராஜவம்சம் ; நிக்கி கல்ராணி ஓபன் டாக்; இப்படி ஒரு ஆசையா ?

சுருக்கம்

கூட்டு குடும்பத்தில் வாழும் பாக்கியம் தனக்கில்லை என ஆதங்கமாக பேசியுள்ளார் நடிகை நிக்கி கல்ராணி.

நடிகர் சசிகுமார், நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள படம் ராஜவம்சம். இந்த படத்தை சுந்தர் சி யின் உதவி இயக்குனர்  கே.வி.கதிர்வேல் இயக்கியுள்ளார். கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தையும், உறவுகளின் பெருமைகளையும் கூறும் படமாக  ராஜவம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் செண்டிமெண்ட் சார்ந்த கதையையே  சசிகுமார் தேர்ந்தெடுப்பார் அந்த வகையில் ராஜவம்சமும் முழு சென்டிமென்ட் கமர்ஷியலாக இருக்க கூடும் என படக்குழு தெரிவித்துள்ளது.

ராஜவம்சம் படத்தில் யோகி பாபு, சதிஷ், தம்பி ராமையா, விஜயகுமார்,மனோ பாலா, சாம்ஸ், ரேகா என்று பல பிரபலங்கள் நடித்து உள்ளனர். இந்த படத்தை  டி.டி ராஜா மற்றும் டி.ஆர்.சஞ்சய் குமார் இணைந்து தயாரித்து உள்ளனர். சித்தார்த் ராமசாமி ஒளிப்பதிவு செய்ய,இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் சாம் சிஎஸ் .

திரையரங்குகளில் வரும் 26ஆம் தேதி வெளிவரும் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நிக்கி கல்ராணி; இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. பெரிய குடும்பத்தில் வாழ வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் அது நிராசையாக உள்ளது. இந்த கனவை நிறைவேற்றும் வகையாக ராஜவம்சம்  படம் அமைந்தது. உண்மையாகவே ஒரு கூட்டு குடும்பத்தில் வாழ்ந்த மகிழ்ச்சியை இந்த படம் எனக்கு கொடுத்தது. குடும்பத்தோடு வந்து இந்த படத்தை ரசிப்பதற்காகவே இயக்குனர் ராஜவம்சம் படத்தை திரையில் தான் ரிலீஸ் செய்வேன் என அடம் பிடித்தார் என குறிப்பிட்டுள்ளார் நிக்கி கல்ராணி.

சசிகுமார் - ஜோதிகா உடன்பிறந்தவர்களாக நடித்திருந்த 'உடன்பிறப்பு' சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதை தொடர்ந்து சசிகுமாரின் மற்றுமொரு செண்டிமெண்ட் படமாக இது திரையரங்கில் அலங்கரிக்க உள்ளது.  இணையம் மூலம் படங்களை கண்டு ரசித்தாலும் குடும்பமாக சென்று திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவமே தனி... இந்த கருத்தை மனதில் கொண்டே ராஜவம்சம் படத்தின் தயாரிப்பாளர்கள் பெரிய திரையில் ராஜவம்சத்தை கொண்டு வர பல முயற்சிகளில் ஈடுபட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!