சண்முக பாண்டியனின் 'படை தலைவன்' பர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட கேப்டன் விஜயகாந்த்!

Published : Aug 25, 2023, 10:51 PM ISTUpdated : Aug 25, 2023, 10:53 PM IST
சண்முக பாண்டியனின் 'படை தலைவன்' பர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட கேப்டன் விஜயகாந்த்!

சுருக்கம்

விஜயகாந்த் மகன், சண்முக பாண்டியன் நடித்துள்ள ''படை தலைவன்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் விடியோ தற்போது ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.  

VJ கம்பைன்ஸ் ஜெகநாதன் பரமசிவம் மற்றும் சுமீத் ஆர்ட்ஸ் சுமீத் சாய்கல் வழங்க, Directors Cinemas  தயாரிப்பில், U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படம் 'படை தலைவன்'. இசைஞானி இளையராஜா இசையமைக்கும் , இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோவை கேப்டன் விஜயகாந்த் தனது பிறந்தநாள் தினமான இன்று வெளியிட்டார். 

இந்த நிகழ்வின் போது பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், "படை தலைவன்" படத்தின் நாயகன் சண்முக பாண்டியன், இயக்குனர் U அன்பு மற்றும் படக்குழுவினர் உடனிருந்தனர். 'படை தலைவன்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ தற்போது ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Biggboss 7: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் எதிர்பாராத ட்விஸ்ட்! புதிய புரோமோவில் சஸ்பென்ஸை உடைத்த கமல்ஹாசன்!

புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன்  'படை தலைவன்' படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. 'வால்டர்' மற்றும் 'ரேக்ளா' பட இயக்குநர் U அன்பு கதையில், “நட்பே துணை”  இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை வசனத்தில்,  இதுவரை திரையில் கண்டிராத காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை, இப்படத்தில் பதிவு செய்யப்படவுள்ளது.

நடிகை விஜயலட்சுமி வீட்டு வரலட்சுமி நோம்பு எப்படி இருக்குனு பாருங்க..! வைரலாகும் போட்டோஸ்..!

மதுரை வீரன் படத்திற்கு பின்னர்,  சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர், ரிஷி ரித்விக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நடிக்கின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்