
பிரபல காமெடி நடிகர் பெஞ்சமின் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் முகக்கவசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஹெல்மெட் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். பலர் ஆர்வமுடன் வாங்கி முகக்கவசம் வாங்கி சென்றதையும் பார்க்கமுடிந்தது.
இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் அது தான் அவர்களது உயிர் கவசம் என்றும் சொல்லலாம். மேலும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து அரசு மற்றும் தன்னார்வ அமைப்பினர் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்
அதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை பகுதியில் முகமது காசிம் என்பவர் ஹெல்மெட் கடை நடத்தி வருகிறார், இவர் கடந்த காலங்களில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி உள்ளார். இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இன்று அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 399 ரூபாய்க்கு ஹெல்மெட் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாகவும் 499 ரூபாய்க்கு ஹெல்மெட் வாங்கினால் 100 முக கவசம் மற்றும் ஃபேஸ்சில்டு கவர் மற்றும் சனிடைசர் போன்றவற்றை இலவசமாக வழங்கினார்.
இந்த விற்பனையை பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் துவக்கி வைத்தார் . மேலும் நடிகர் பெஞ்சமின் கூறுகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகளை எனது நண்பர் மேற்கொண்டு வருகிறார் கட்டாயம் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மட்டுமே இந்த இலவசம் பெட்ரோல் மற்றும் முக கவச விற்பனையை துவங்கி உள்ளோம் என்று கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.