சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்! வெள்ளத்தில் சிக்கி பிரபல பாடகர் பலி..!

By manimegalai aFirst Published Jul 14, 2021, 6:02 PM IST
Highlights

பிரபல பஞ்சாபி பாடகரான மன்மீது சிங் தன்னுடைய நண்பர்களுடன் தர்மசாலாவுக்கு சுற்றுலா சென்ற நிலையில், ஆற்றை பார்வையிடும் போது அதில் தவறி விழுந்து... ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

பிரபல பஞ்சாபி பாடகரான மன்மீது சிங் தன்னுடைய நண்பர்களுடன் தர்மசாலாவுக்கு சுற்றுலா சென்ற நிலையில், ஆற்றை பார்வையிடும் போது அதில் தவறி விழுந்து... ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபில் புகழ்பெற்ற சைன் சகோதரர்களில் ஒருவரான மன்மீத் சிங், தன்னுடைய நண்பர்களுடன் தர்மசாலாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது, இந்த குழுவினர் தர்மசாலாவிலிருந்து கரேரிக்கு பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. தற்போது அங்கு மழை பெய்து வருவதால், ஆற்றை பார்வையிட்டு கொண்டிருக்கும் போது, மன்மீத் சிங் கால் வழுக்கு ஆற்றில் விழுந்துள்ளார்.

இதுகுறித்து உடனடியாக மன்மீத் சிங்கின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் இவரை தேடும் பணியும் தீவிர படுத்தப்பட்டது. தற்போது இமாச்சல பிரதேசத்தில் மழை பெய்து வருவதால் கரேரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால்.... தேடுதல் பணியிலும் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் இவரது உடல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை காரணமாக இமாச்சல பிரதேசத்தின் நிலைமை ஹெலிகாப்டர் மூலம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் மாநில அரசுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களின் பாதுகாப்பிற்காக பிரார்த்திக்கிறேன்" என்று பிரதமர் மோடியின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதும். 

மேலும் பாடகரின் இறப்பு குறித்து பல பிரபலங்கள், தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இதுவரை இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர், மற்றும் 8 பேர் மாயமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!