ராஜமௌலியின் 'RRR' படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்! குஷியான ரசிகர்கள்!

By manimegalai aFirst Published Jul 14, 2021, 3:23 PM IST
Highlights

இந்திய மக்களை ஆட்டி படைத்து வந்த கொரோனா இரண்டாவது அலை, சற்று கட்டுக்குள் வந்துள்ளதாலும், அடுத்தடுத்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதாலும் கிடப்பில் RRR படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 'ROAR OF  RRR " என்கிற புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு புதிய அப்டேட் வர உள்ள தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
 

இந்திய மக்களை ஆட்டி படைத்து வந்த கொரோனா இரண்டாவது அலை, சற்று கட்டுக்குள் வந்துள்ளதாலும், அடுத்தடுத்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதாலும் கிடப்பில் RRR படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 'ROAR OF  RRR " என்கிற புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு புதிய அப்டேட் வர உள்ள தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு “RRR ” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம் சரண், மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் ஹீரோவாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், பாலிவுட் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். சுமார் 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில், விறுவிறுப்பாக இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில்  தாறுமாறாக வைரலானது. பின்னர் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, மீண்டும் துவங்கியது. பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்ட போதிலும் இன்னும் இரண்டு பாடல்கள் மற்றும் சில பேட்ச் ஒர்க் மட்டுமே மீதம் உள்ளதாக படக்குழு அறிவித்தது. எனவே விரைவில் படப்பிடிப்பு மீண்டும் துவங்குவது குறித்து  படக்குழு தகவல் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைவரது எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் விதமாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு நாளை காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி குறித்து படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

இதில், "Roar of RRR ' என நாளை 11 மணிக்கு வரை காத்திருங்கள் என, கூறுவது போல் ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. அதாவது நாளை இந்த படம் குறித்து மேக்கிங் வீடியோ வெளியாகுமா? அல்லது வேறு ஏதேனும் இன்ப அதிர்ச்சி ரசிகர்களுக்கு கார்த்திருக்கிறதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவல் இதோ... 

 

Tomorrow at 11 AM… 💥💥💥 pic.twitter.com/DAGqmlhdqI

— Lyca Productions (@LycaProductions)

click me!