#Breaking ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கேட்டு வழக்கு! விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த ஐகோர்ட்!

By manimegalai aFirst Published Jul 13, 2021, 1:54 PM IST
Highlights

கடந்த 2012 ஆம் ஆண்டு,  இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளார்.
 

கடந்த 2012 ஆம் ஆண்டு,  இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளார்.

உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள், விலை உயர்ந்த கார்களை வைத்து கொள்வதை மிகவும் பெருமையாக கருதுகிறார்கள். அந்த வகையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியை நீக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜய் தரப்பில் இருந்து ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்ததோடு, சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என தங்களுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும் என்றும், ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது.... வரி கட்டுவது என்பது நீங்கள் கொடுக்கும் நன்கொடை அல்ல, கட்டாய பங்களிப்பு என தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த ஒரு லட்ச ரூபாயை இரண்டு வாரத்திற்குள் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விஜய் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் தொடர்ந்த வழக்குக்கு இப்படி ஒரு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 

click me!