
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லிங்குசாமி. இவர் இயக்கத்தில் கடைசியாக தெலுங்கு நடிகர் ராம் போத்தினேனி நடிப்பில் 'தி வாரியர்' திரைப்படம் வெளியானது. கீர்த்தி செட்டி நாயகியாக நடித்திருந்த இந்த படத்தில், ஆதி வில்லனாக நடித்திருந்தார். மேலும் நதியா, ரெடின் கிங்ஸ்லி, அக்ஷரா கவுடா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ராம் போத்தினேனி, எப்படி வில்லன் அராஜகத்தை அடக்குகிறார், அதனால் அவருக்கு என்னென்ன பிரச்சனைகள் வருகிறது என, ஏற்கனவே வெளியான படங்களின் பாணியில் தான் இந்த படமும் வெளியானது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற புல்லட்டு பாடல் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்திக்கிற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது என கூறலாம். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், கலவையான விமர்சனங்களை மற்றுமே பெற்றது.
மேலும் செய்திகள்: சினிமா தொழிலாளர்களை கண்டு கொள்ளாத நடிகர்கள் மத்தியில்.. சிரஞ்சீவி எடுத்த அதிரடி முடிவு! குவியும் பாராட்டுக்கள்
இந்நிலையில் பிரபல இயக்குனர் லிங்குசாமி செக் மோசடி செய்ததற்காக ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள தகவல், திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்: விவாகரத்துக்கு பின் மகனுக்காக இணைந்த ஐஸ்வர்யா - தனுஷ்! மேட்சிங் - மேட்சிங் உடையில் வைரலாகும் புகைப்படம்!
லிங்குசாமி செக் மோசடி செய்ததாக பிவிபி நிறுவனம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் லிங்குசாமி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் இயக்குநர் லிங்குசாமிக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது. இதை தொடர்ந்து, லிங்குசாமி தரப்பில் இருந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.