படக்குழுவில் ஒருவருக்கு கொரோனா... இயக்குநர் ஹரி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு!

By manimegalai a  |  First Published Mar 19, 2021, 10:45 AM IST

தமிழ் சினிமாவில் கமெர்சியல் வெற்றி படங்களை கொடுத்து, முக்கிய இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் இயக்குனர் ஹரி. இவர் திடீர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


தமிழ் சினிமாவில் கமெர்சியல் வெற்றி படங்களை கொடுத்து, முக்கிய இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் இயக்குனர் ஹரி. இவர் திடீர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tap to resize

Latest Videos

நடிகர் பிரசாந்த், மற்றும் சிம்ரன் நடித்த 'தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக தன்னுடைய திரையுலக பயணத்தை ஆரம்பித்தவர், இயக்குனர் ஹரி. இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய சாமி திரைப்பப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின்னர் கோவில், ஐயா, என பல படங்களை இயக்கிய இவர், நடிகர் சூர்யாவின் ஆஸ்தான இயக்குனராகவும் அறியப்படுபவர். இதுவரை நடிகர் சூர்யாவை வைத்து இவர் இயக்கிய, ஆறு, வேல், சிங்கம் சீரிஸ் ஆகிய படங்கள் தொடர் வெற்றி பெற்றுள்ளது.

தற்போது தன்னுடைய மைத்துனர், அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த அப்படத்தின் படப்பிடிப்பு, கிராமத்து கதைக்களம் கொண்ட இந்த திரைப்படம், நெய்க்காரப்பட்டியில் நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ஹரி கடுமையான காச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், இயக்குனர் ஹரியுடன் படக்குழுவில் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஹரிக்கு கொரோனா இருக்குமா என்கிற அச்சம் நிலவி வந்த நிலையில், ஹரிக்கு சோதனை செய்த போது... நெகடிவ் என்று வந்துள்ளது. எனினும் தீவிர காச்சல் காரணமாக இயக்குனர் ஹரி பழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

click me!