பிரசாந்தின் 'அந்தகன்' படத்தின் இணைந்த புதிய நடிகை!

By manimegalai aFirst Published Mar 18, 2021, 7:30 PM IST
Highlights

நடிகர் பிரஷாந்த் நீண்ட இடைவெளிக்கு பின், நடிக்க உள்ள 'அந்தாதூன்' தமிழ் பட ரீமேக், படத்தின் படப்பிடிப்பு மார்ச் 10 ஆம் தேதி துவங்கிய   நிலையில், பிரபல நடிகை இந்த படத்தில் இணைந்துள்ளார்.  
 

நடிகர் பிரஷாந்த் நீண்ட இடைவெளிக்கு பின், நடிக்க உள்ள 'அந்தாதூன்' தமிழ் பட ரீமேக், படத்தின் படப்பிடிப்பு மார்ச் 10 ஆம் தேதி துவங்கிய   நிலையில், பிரபல நடிகை இந்த படத்தில் இணைந்துள்ளார்.  

நடிகர் பிரஷாந்த் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில், இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று,  வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்த 'அந்தாதூன்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

'அந்தாதூன்' திரைப்படம் சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படி சுமார் 400 கோடிக்கு மேல்  வசூல் செய்தது. இந்தப் படத்தில் ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல பிரபலங்கள் நைட்த்திருந்தனர். மேலும் சிறந்த நடிப்பிற்கான தேசிய விருது ஆயூஷ்மான் குரானாவுக்கும், சிறந்த  இந்திப் படம், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் மூன்று தேசிய விருதுகளையும்  'அந்தாதூன்' அள்ளியது.

தற்போது இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க பிரஷாந்த் மும்முரமாக கவனம் செலுத்தி வந்தார். இந்த படத்தை ஜோதிகா நடித்த ’பொன்மகள் வந்தாள்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஜே.ஜே ஃப்ரெட்ரிக் இயக்குவதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர்  இந்த படத்தில் இருந்து இயக்குனர் ஜே.ஜே ஃப்ரெட்ரிக் விலகினார். அவருக்கு பதிலாக இந்த படத்தின் தயாரிப்பாளர், தியாகராஜன் படத்தை இயக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'அந்தகன்' என பெயரிப்பட்டுள்ள இந்த படத்தில், பிரசாந்துடன் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், செம்மலர், பூவையார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். மேலும் புதிதாக நடிகை ப்ரியா ஆனந்த் இணைந்துள்ளார். இதனை உறுதி செய்யும் விதமாக புதிய புகைப்படம் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

'அந்தகன்' படத்தில் ஒளிப்பதிவாளராக ரவியாதவ், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பின், சூப்பர் ஹிட் பட ரீமேக்கில் பிரஷாந்த் நடிக்க உள்ளதால்,  ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!