ஆர்யாவுடன் ‘டெடி’ படத்தில் நடித்தது இவரா? ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட பொம்மை குறித்து கசிந்தது ரகசியம்!

Published : Mar 18, 2021, 06:31 PM IST
ஆர்யாவுடன் ‘டெடி’ படத்தில் நடித்தது இவரா? ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட பொம்மை குறித்து கசிந்தது ரகசியம்!

சுருக்கம்

நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா திருமணத்திற்குப் பின் முதல்முறையாக இணைந்து ஜோடியாக நடித்த 'டெடி' படத்தில் பொம்மையாக நடித்த கதாபாத்திரம் குறித்த ரகசியத்தை இயக்குனர் வெளிப்படுத்தியுள்ளார்.  

நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா திருமணத்திற்குப் பின் முதல்முறையாக இணைந்து ஜோடியாக நடித்த 'டெடி' படத்தில் பொம்மையாக நடித்த கதாபாத்திரம் குறித்த ரகசியத்தை இயக்குனர் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்: வேஷ்டி சட்டையில்... கையில் துப்பாக்கியுடன் வெறித்தனம்..! சூர்யா வெளியிட்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!
 

நடிகர் ஆர்யா ,சாயிஷா இருவரும் 'கஜினிகாந்த்' படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வயப்பட்டனர். இதைத்தொடர்ந்து 'காப்பான்' படத்திலும் இருவரும் சேர்ந்து நடித்திருந்தாலும், சாயிஷா நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு, காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பின் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா - சாயிஷா இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் 'டெடி' . இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆன நிலையில்,  மார்ச் 12ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. மேலும் குழந்தைகளை கவரும் விதத்தில் 'டெடி' பொம்மை  ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

மேலும் செய்திகள்: 39 வயதிலும் இப்படியா? பிகினி உடை கவர்ச்சியில் இணையத்தை அலறவிட்ட அஜித் பட நாயகி!
 

லாஜிக் இல்லாத கதை என்றாலும், காட்சிகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் வரும் டெடி பொம்மை கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டதா? அல்லது குழந்தை யாரையாவது வைத்து நடிக்க வைத்தார்களா? என்கிற சந்தேகத்தை ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளம் மூலம் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன், டெடி படத்தில் பொம்மையாக நடித்த கோகுல் என்பவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்: பளபளக்கும் பாலிவுட் கவர்ச்சி நாயகியுடன் சரவணா ஸ்டோர் சரவணன்! வேற லெவல் ஸ்டைலிஷ் போட்டோஸ்!
 

மேலும் இந்த கதாபாத்திரத்திற்காக முழுக்க முழுக்க அந்த பொம்மையின் உடை அணிந்து இவர் நடித்ததாகவும் அவருடைய தலையை மட்டும் 3d வடிவில் டெக்னாலஜி மூலம் மாற்றப்பட்டது என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டெடியாக நடித்த நடித்த கோகுலுக்கு நெட்டிசன்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!