சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தார் நடிகர் மன்சூர் அலிகான்!

By manimegalai aFirst Published Mar 18, 2021, 3:02 PM IST
Highlights

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில், சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் நடிகர் மன்சூர் அலிகான்.
 

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில், சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் நடிகர் மன்சூர் அலிகான்.

இயக்குனரும், அரசியல் தலைவருமான சீமான்நின் நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, லோக்சபா தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் களம் கண்டவர் நடிகர் மன்சூர் அலிகான். சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, ‘தமிழ் தேசிய புலிகள் கட்சி’ என்கிற கட்சியை துவங்கியுள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில் தன்னுடைய கட்சியான ‘தமிழ் தேசிய புலிகள் கட்சி’ க்கு, முறையான அங்கீகாரம் கிடைக்காததால், கோவை ‘தொண்டாமுத்தூர்’ தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 11’மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று பேரூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்அரசனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சையாக போட்டியிட உள்ள, கோவை தொந்தாமுத்தூர் தொகுதியில், அதிமுகவில் செல்வாக்குமிக்க தலைவராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் உள்ள எஸ்.பி.வேலுமணி தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள தொண்டாமுத்தூரில் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில், அவருக்கு சவால் விடும்விதமாக திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழக இளைஞர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான கார்த்திகேய சிவசேனாபதியை போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லோக்சபா தேர்தலின் போது, மிகவும் வித்தியாசமாக... மக்களின் ஒருவராக இறங்கி, வாக்குகள் சேகரித்த மன்சூர் அலிகான் இந்த முறை எப்படி வாக்குகள் சேகரிப்பார் என்பதும்... இவரது அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதும்... எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!