26 கோடி மோசடி வழக்கில் ஈடுபட்ட நடிகையின் மகன்? இசையமைப்பாளர் அம்ரீஷ் தரப்பு பரபரப்பு தகவல்!

By manimegalai aFirst Published Mar 18, 2021, 11:34 AM IST
Highlights

அரியவகை இரிடியம் இருப்பதாக கூறி தொழிலதிபரிடம் 26.20 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக பிரபல நடிகை ஜெயசித்ராவின் மகனும், இசையமைப்பாளருமான, அம்ரீஷை  மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்த நிலையில் இதுகுறித்து, அம்ரீஷ் தரப்பில் இருந்து பரபரப்பு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
 

அரியவகை இரிடியம் இருப்பதாக கூறி தொழிலதிபரிடம் 26.20 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக பிரபல நடிகை ஜெயசித்ராவின் மகனும், இசையமைப்பாளருமான, அம்ரீஷை  மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்த நிலையில் இதுகுறித்து, அம்ரீஷ் தரப்பில் இருந்து பரபரப்பு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்ட சிவா கெட்ட சிவா' உள்ளிட்ட ஒரு சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். மேலும் தன்னுடைய அம்மா இயக்கிய ஒரு படத்திலும் நாயகனாக நடித்தார். இந்நிலையில், அம்ரீஷ் வளசரவாக்கத்தில் சேர்ந்த தொழிலதிபர் நெடுமாறனிடம்,  தன்னிடமும் தனது நண்பர்களிடமும் அரிய வகை இரிடியம் உள்ளதாகவும், அதனை மலேசியாவில் உள்ள ஒரு நிறுவனம்  2.50 லட்சம் கோடிக்கு வாங்க தயாராக உள்ளதாக கூறி ஆசை காட்டி பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

இதுகுறித்து நெடுமாறன் அளித்த புகாரில், இரிடியம் இருப்பதாக கூறி... தன்னை மலேசியாவிற்கு அழைத்துச் சென்று,  நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து 2.50 கோடி லட்சத்திற்கு மலேசிய நிறுவனம் இரிடியத்தை வாங்குவது போல் நாடகமாடி ஒப்பந்தம் போட்டனர். இதற்காக, தன்னிடம்  இருந்து அம்ரீஷ் மற்றும் அவரது நண்பர்கள் 26 .20 தங்களுக்கு பணம் பெற்று மோசடி செய்ததாகவும் தெரிவித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அம்ரீஷ் மற்றும் அவரது நண்பர்களை 26 கோடி ரூபாய் மோசடி செய்ததற்காக கைது செய்ததாக கூறப்பட்டது. இந்த சர்ச்சைக்கு பதில் அளிக்கும் விதமாக இசையமைப்பாளர் அம்ரீஷ் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளதாவது, இரிடியம் குறித்த மோசடி வழக்கில்,  26 கோடி ரூபாய்க்கும் வாங்கியதற்கும் அம்ரீஷிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. யாரும் அமரீஷிடம் 26 கோடி ரூபாய் கொடுக்கவுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!