'என்ஜாய் எஞ்சாமி' பாடலை மீண்டும் மீண்டும் கேட்கிறேன்! சந்தோஷ் நாராயணன் மகளை பாராட்டிய பிரபல நடிகர்!

Published : Mar 17, 2021, 07:57 PM IST
'என்ஜாய் எஞ்சாமி' பாடலை மீண்டும் மீண்டும் கேட்கிறேன்! சந்தோஷ் நாராயணன் மகளை பாராட்டிய பிரபல நடிகர்!

சுருக்கம்

ரவுடி பேபி புகழ்,  தீ பாடி, நடித்துள்ள 'என்ஜோய் எஞ்சாமி' ஆல்பம் பாடலை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மார்ச் 7 ஆம் தேதி அன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த பாடலுக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்பதாக பிரபல நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்து, இந்த பாடலை பாடி நடித்துள்ள தீ மற்றும் அறிவு ஆகியோரை பாராட்டியுள்ளார்.  

ரவுடி பேபி புகழ்,  தீ பாடி, நடித்துள்ள 'என்ஜோய் எஞ்சாமி' ஆல்பம் பாடலை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மார்ச் 7 ஆம் தேதி அன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த பாடலுக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்பதாக பிரபல நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்து, இந்த பாடலை பாடி நடித்துள்ள தீ மற்றும் அறிவு ஆகியோரை பாராட்டியுள்ளார்.

'என்ஜாய் எஞ்சாமி' பாடலின் வரிகளை அறிவு எழுதி, தீ யுடன் சேர்ந்து பாடியுள்ளார். மகளின் முதல் இண்டிபெண்டெண்ட் ஆல்பத்திற்கு  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சந்தோஷ் நாராயணனின் வழக்கமான பாடல்களை போல் ‘என்ஜாய் என்ஜாமி’ பாடலும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.

இந்த பாடலின் பாடலாசிரியர் மற்றும் ராப் சிங்கருமான அறிவு மற்றும் தீயின் காம்பினேஷன் வேற லெவல். அழிந்து வரும், காடுகள், தாவரங்கள், கிளிகள், பூச்சிகள், பறவைகள் மற்றும் விலங்குகள் நிறைந்த வெப்பமண்டல காடுகளை இந்த வரிகள் உயிர்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. ராப், மற்றும் நாட்டுப்புற இசை என இரண்டையும் கலந்த காம்போவாக இந்த பாடல் வெளியாகியுள்ளது. தி - அறிவு இந்த பாடலை பாடியுள்ளது அல்டிமேட் என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

விதவிதமான தோற்றத்தில் தோன்றி, இந்த பாடலை... உழைக்கும் விவசாய மக்களுக்கு அர்பணித்துள்ளனர் தீ - அறிவு. இந்த பாடல் வெளியான 10 நாட்களில், 25 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருப்பதோடு 1 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்களை குவித்துள்ளது. மகளின் இந்த பாடலுக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து, சந்தோஷ் நாராயணன், தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து, ஆதரவு மற்றும் அங்கீகாரம் பெறப்பட வேண்டிய குரல்களையும், கலைஞர்களையும் அடையாளம் காண்பதற்கான முயற்சியை நாங்கள் தொடர்வோம்” என்று தெரிவித்திருந்தார்.

இவரை தொடர்ந்து, நடிகர் துல்கர் சல்மான் "என்ஜாய் எஞ்சாமி' பாடல் மிகவும் அற்புதமாக உள்ளது. சில நாட்களாக நான் அந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தீ மற்றும் அறிவு ஆகியோர் சிறப்பாக பாடி உள்ளனர் என மனதார பாராட்டியுள்ளார். தொடர்ந்து இந்த பாடல் பல்வேறு சாதனைகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!