
தளபதி விஜய், திடீர் என இன்று கரூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
தளபதி விஜய்யின் இந்த சந்திப்பு குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், "விஜய் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட வாரியாக தன்னுடைய ரசிகர்களை சந்தித்து வருவதை வழக்கமாக கொண்டவர். ஆனால் கடந்த 8 மாதங்களாக கொரோனா பிரச்சனை தலைவிரித்து ஆடியதால், உரிய பாதுகாப்புகளுடன் இரண்டு முறை மட்டுமே குறிப்பிட்ட ரசிகர்களை சந்தித்தார்.
அந்த வகையில் இன்று, கரூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, சுமார் 300 க்கும் மேற்பட்ட ரசிகர்களை, சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
சில நிமிடங்கள் ரசிகர்களுடன் பேசிய விஜய், பின்னர்... ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். இது எப்போதும் போன்ற ரசிகர்கள் சந்திப்பு தான் என்று, எவ்வித உள்நோக்கத்துடன் நடந்த சந்திப்பு இல்லை என விஜய் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.