விமர்சனங்களை கடந்து ஒரே நாளில் வசூலை குவித்த பிரம்மாஸ்திர.. எவ்வளவு தெரியுமா?

Published : Sep 10, 2022, 08:46 PM ISTUpdated : Sep 10, 2022, 08:48 PM IST
 விமர்சனங்களை கடந்து ஒரே நாளில் வசூலை குவித்த பிரம்மாஸ்திர.. எவ்வளவு தெரியுமா?

சுருக்கம்

பிரம்மாஸ்திர படம் ஒரே நாளில் ரூ.75 கோடிகளை வசூல் செய்துள்ளதாக ரன்வீர் கபூர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பிரம்மாஸ்திர படம் பேண்டஸி அதிரடி சாகச திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அயன் முகர்ஜி இயக்கிய இந்த படத்தை கரன்ஜோகர், அபூர்வ மேத்தா நமித் மகோத்ரா மற்றும் முகர்ஜி உள்ளிட்டோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில் அமிதாப்பச்சன்,, ஆலியா பட், மௌனிகா ராய், நாகார்ஜுனா ஆகினேனி உள்ளிட்டோ ரன்வீர் கபூருடன் நடித்துள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த படம் பல ஆண்டு தாமதத்திற்கு பிறகு தற்போது வெளியாகி உள்ளது. பல்கேரியா, லண்டன், நியூயார்க், தாய்லாந்து, மணாலி, மும்பை மற்றும் வாரணாசி என பல இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.  ரூ. 410 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இது இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக அமைந்தது.

முன்னதாக பாலிவுட்டில் வெளியான படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த நிலையில் பிரம்மாஸ்திரா மீது ரசிகர்களின் கண்ணோட்டம் திரும்பி இருந்தது. அதோடு இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களும் செம ஹிட் அடித்தன.  ரன்வீர்- அலியாதிருமணத்திற்கு பிறகு வெளியாகும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.  பிரபஞ்சங்களை அளிக்கக்கூடிய, அனைத்து உயிரினங்களையும் வெல்லும் திறன் கொண்ட சிவபெருமானின் இயற்கை அப்பாற்பட்ட ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. படம் கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

மேலும் செய்திகளுக்கு..."ராஜான்னு ஒருத்தரு தான் இருக்க முடியும்"..மிருகங்களோடு கமல்.. விக்ரமுக்கு பிறகு வேறலெவலில் பிக்பாஸ் ப்ரோமோ

 

ஆனால் முதல் நாளிலேயே படம் குறித்த பல சர்ச்சைகளும் கிளம்பியது. அதோடு பைகாட் பிரம்மாஸ்திரா என்னும் ஹேஷ் டேக்கும் வைரல் ஆனது. கங்கனா ராவத் உட்பட பிரபலங்கள் பலரும் மோசமான விமர்சங்களை கொடுத்திருந்தனர். இதனால் பிரம்மாஸ்திராவும் தோல்வியை சந்தித்ததாக பலரும் பேசத் தொடங்கினர். இந்நிலையில் படத்தின் வசூல் குறித்து நாயகன் ரன்பீர் கபூர் தனது சமூக வலைதள பக்கத்தில் புதிய பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இந்த படம் ஒரே நாளில் ரூ.75 கோடிகளை வசூல் செய்துள்ளதாக மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...அஜித்தின் ஆர்வத்தை கையில் எடுத்த ரம்யா பாண்டியன்..வைரல் பதிவு இதோ

மேலும் செய்திகளுக்கு...குட்டை குட்டை உடை அணிந்து இதயத்தை கிள்ளும் அதுல்யா ரவி... க்யூட் போட்டோஸ் இதோ

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

தி கோட் படம் பிடிக்கும்-பாகிஸ்தான் ரசிகை உருக்கம்: உலகளவில் டிரெண்டாகும் விஜய்யின் ஜன நாயகன்!
கழுத்தைபிடித்து வீட்டைவிட்டு துரத்தப்பட்ட தங்கமயில்-அதிர்ச்சியில் ஆடிப்போன பாக்கியம், மாணிக்கம்!