Ajith : கைநீட்டி பேசும் போனி கபூர்.. பணிவுடன் கைகட்டி நிற்கும் அஜித்- வைரலாகும் ‘வலிமை’ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

Ganesh A   | Asianet News
Published : Dec 13, 2021, 03:24 PM ISTUpdated : Dec 13, 2021, 03:27 PM IST
Ajith : கைநீட்டி பேசும் போனி கபூர்.. பணிவுடன் கைகட்டி நிற்கும் அஜித்- வைரலாகும் ‘வலிமை’ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

சுருக்கம்

வலிமை (valimai) படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் (Boney Kapoor) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் (ajith) உறையாடும் போது எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வலிமை படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இதனால் படத்தின் அப்டேட்டுக்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. ஏற்கனவே இப்படடத்தின் டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. வெளியீட்டுக்கு ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், படத்தின் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. வலிமை படத்தை தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர். 

இந்நிலையில், வலிமை (valimai) படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் உரையாடும் போது எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் நடிகர் அஜித் பணிவுடன் கைகட்டி நிற்பதை பார்த்த ரசிகர்கள், அதனை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தென்னிந்தியாவின் 'ராஜமாதா'; 40 ஆண்டுகால உழைப்பு; 200 கோடி சொத்து: ரம்யா கிருஷ்ணனின் அசுர வளர்ச்சி!
லாக்கப்பில் கார்த்திக்: துடி துடித்துப் போன ரேவதி: அதிரடி திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் சீரியல்!