Project K : ஐதராபாத் வந்த தீபிகா படுகோன்... சுவையான சர்ப்ரைஸ் கொடுத்த பிரபாஸ்!!

Kanmani P   | Asianet News
Published : Dec 13, 2021, 03:06 PM IST
Project K : ஐதராபாத் வந்த தீபிகா படுகோன்... சுவையான  சர்ப்ரைஸ் கொடுத்த பிரபாஸ்!!

சுருக்கம்

Project K : சூட்டிங் ஸ்பாட்டில் தீபிகா படுகோனை உபசரித்த பிரபாஸ் அவருக்கு ஆடம்பர தெலுங்கு  உணவு வகைகளை பரிமாறி உள்ளார்.

தெலுங்கு ஸ்டார் பிரபாஸ், 'மகாநடி' இயக்குனர் நாக் அஸ்வினுடன் இணைந்து, 'புராஜெக்ட்-கே' படத்தில் நடித்து வருகிறார். , பிரபாஸ் ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடித்து வரும் இந்த படத்தில் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளார்.

படத்திற்கு தற்காலிகமாக 'புராஜெக்ட்-கே' என்று பெயரிடப்பட்டுள்ளது, தயாரிப்பாளர்கள் ஹைதராபாத்தில் முதல் ஷெட்யூலைத் தொடங்கியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. பிரபாஸ் மற்றும் தீபிகா சம்பந்தப்பட்ட சில காட்சிகளை படக்குழுவினர் எடுக்க உள்ளனர்.

படப்பிடிப்பில் கலந்து கொள்ள  தீபிகா படுகோன் இரண்டு நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் சென்றிருந்தார், அதே நேரத்தில் பிரபாஸும் செட்டில் இருந்தார். இதற்கிடையில், தயாரிப்பாளர்கள் பிரபாஸ் மற்றும் தீபிகா இடம் பெற்ற முதல் ஷாட்டின் வீடியோ பைட்டை வெளியிட்டனர்.

சூட்டிங் ஸ்பாட்டில் தீபிகா படுகோனை உபசரித்த பிரபாஸ் அவருக்கு ஆடம்பர தெலுங்கு  உணவு வகைகளை பரிமாறி உள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் தீபிகா படுகோன் பகிர்ந்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!