
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் முதல் முறையாக நடித்திருந்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
இப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு, இந்தியில் வெளியான 'பிங்க்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் 'பிங்க்' படத்தில், நடிகர் அமிதாப்பச்சன் ஏற்று நடித்திருந்த வக்கீல் வேடத்தில் நடிகர் அஜித் நடித்திருந்தார். மேலும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரங், வித்யாபாலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 6 ஆம் தேதி சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் ப்ரீமியர் காட்சி வெளியிடப்பட்டது.
இப்படம் வெளியாகி 4 நாட்கள் ஆகியும், இதுவரை, எந்த ஒரு எதிர்மறையான விமர்சனங்களும், இல்லாமல் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது மட்டும் இன்றி, பெண்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், போனிகபூர் இந்த படத்தின் வசூல் குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர்... நேர்கொண்ட பார்வை அனைத்து சாதனைகளையும் தகர்த்துள்ளது என்றும் வெளிநாடுகளில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை நேர்கொண்டபார்வை வசூல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த செய்தி அஜித் ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது. மேலும் இப்படம் சென்னையில் மட்டும் 1.58 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.