
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 50வது நாளை எட்டியுள்ளது. கடந்த வாரம் பெரிதாக போட்டியாளர்களுக்குள், எந்த ஒரு பிரச்சனையும் வரவில்லை என்றாலும், இனி வரும் வாரங்களில் ஏதேனும் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்கு ஏற்றாப்போல நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து வயல் கார்டு சுற்று மூலம், யார் யார் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார்கள் என்பதே? ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சி குறித்து , சற்று முன் வெளியான ப்ரோமோவில் மதுமிதாவை பார்த்து ரசிகை ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கி பார்க்கும் காட்சி வெளியாகியுள்ளது.
இந்த ப்ரோமோவில், கமல்ஹாசன் கஸ்தூரியிடம் ஏதோ பேச அதற்கு கஸ்தூரி கன்பேசன் ரூமில் என்ன நடக்கிறது என்பது இங்கு யாருக்கும் தெரியவில்லை என்று கூற இதற்கு கமல்ஹாசன் சாக்ஷிக்கு கொஞ்சம் சொல்லிட்டீங்க என கூறுகிறார்.
இதையடுத்து, தன்னுடைய தலையை கீழே குனிந்தவாறு சிரிக்கிறார் சாக்ஷி. பின் கஸ்தூரி இங்கிருக்கும் ஒவ்வொருவரும் தங்கமான ... நல்லவங்க, என கூறுகிறார். பின் ஒரு கால் வரப்போகிறது என கமலஹாசன் கூறியபின், மதுமிதா விடம் ரசிகை ஒருவர் பேசுகிறார்.
அப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் முதலில் நீங்கள் வந்தபோது மனதில் பட்டதை நேரடியாக பேசினீர்கள். ஆனால் தற்போது நடிப்பது போல தோன்றுகிறதே என அவர் கேட்ட, உடனே மதுமிதா தன் கண்களை விசாலமாக விரித்து விழிபிதுங்கி பார்க்கிறார். போன் காலர் பேசியது தான் உண்மையோ என பலர் தங்களுடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள். இதற்கு மதுமிதா என்ன பதில் அளிப்பார் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.