'இந்தியன் 2 ' படத்தில் கமலுக்கு வில்லனாகும் முன்னணி நடிகர்!

Published : Aug 11, 2019, 02:54 PM IST
'இந்தியன் 2 ' படத்தில் கமலுக்கு வில்லனாகும் முன்னணி நடிகர்!

சுருக்கம்

உலகநாயகன் கமலஹாசன்,  பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடித்த 'இந்தியன்' படத்தை தொடர்ந்து, மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ள திரைப்படம் 'இந்தியன் 2 '  இந்த படத்தில் தற்போது முன்னணி நடிகர் பாபி சிம்ஹா இணைந்துள்ளார்.   

கடந்த 1996ஆம் ஆண்டு, கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான 'இந்தியன்' படம் சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை, தொடர்ந்து 23 ஆண்டுகளுக்குப் பின், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவு செய்துள்ளார் இயக்குனர் சங்கர்.

இந்த படத்திலும் நடிகர் கமலஹாசனே கதாநாயகனாக நடிக்க உள்ளார். அந்த வகையில் ஏற்கனவே,  இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில்,  ஒரு சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் இந்த மாதம் முதல், மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என அறிவித்திருந்தனர் படக்குழுவினர்.  இந்நிலையில் இந்த படத்தில் காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், உள்ளிட்ட பலர் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் நடிகை பிரியா பவானியும்,  இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.  இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது லைகா நிறுவனம்.  இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னையில் தொடங்க விருப்பதாகவும் முதல் ஷெட்யூலில் சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி,  இந்த படத்தில் ஜிகர்தண்டா படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா இணைந்து இருப்பதாகவும்,  அவர் வில்லனாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!