Ranbir : "பாலிவுட்டின் பணக்கார குழந்தை" ரன்பீர் கபூர் தன் குழந்தைக்கு கொடுக்கப்போகும் சொத்து எவ்வளவு தெரியுமா?

Ansgar R |  
Published : Mar 30, 2024, 10:00 PM IST
Ranbir : "பாலிவுட்டின் பணக்கார குழந்தை" ரன்பீர் கபூர் தன் குழந்தைக்கு கொடுக்கப்போகும் சொத்து எவ்வளவு தெரியுமா?

சுருக்கம்

Ranbir Kapoor : பிரபல நடிகர் ரன்பீர் கபூர் பிரபல நடிகை ஆலியா பட் அவர்களை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள ஒரு சில தகவல்களின்படி ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் காட்டிவரும் புதிய வீடு, அவர்களின் மகள் ரஹாவின் பெயரில் இருக்கும் என்று ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அவர் மைனர் என்பதால் அந்த சொகு பங்களாவின் இணை உரிமையாளராக நீது கபூர் இருப்பார் என்று கூறப்படுகிறது. நீது கபூர், ரன்பீர் கபூரின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் நீது கபூர் ஆகியோர் சமீபத்தில் மும்பையின் பாந்த்ராவின் மையத்தில் அமைந்துள்ள அவர்களின் கட்டுமானத்தில் உள்ள பங்களாவில் ஒன்றாகக் காணப்பட்டனர். பாலிவுட் லைஃப் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ரன்பீர் தனது மற்றும் ஆலியாவின் ஒரு வயது மகள் ரஹா கபூரின் பெயரில் 'பங்களாவுக்கு' பெயரிடுவார் என்று கூறப்படுகிறது. 

இளவயது மரணங்களின் வேதனை பெரிது.! கமல்ஹாசன் முதல் கீர்த்தி சுரேஷ் வரை டேனியல் பாலாஜி மறைவுக்கு இரங்கல்!

இது சிறுமி ராஹாவை, பாலிவுட்டின் 'இளைய மற்றும் பணக்கார நட்சத்திரக் குழந்தையாக' மாற்றும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய பங்களாவை கட்ட ரன்பீர் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு  சுமார் 250 கோடி செலவாகும் என்றும், ஷாருக்கானின் மன்னத் மற்றும் அமிதாப் பச்சனின் ஜல்சாவை முறியடித்து மும்பையில் உள்ள 'மிகவும் விலை உயர்ந்த' பிரபல பங்களாவாக இது மாறவுள்ளது என்றும் கூறப்படுகிறது.

“ரன்பீர் மற்றும் ஆலியா இருவரும் தங்கள் கனவு வீட்டை உருவாக்க கடினமாக சம்பாதித்த பணத்தை சமமாக முதலீடு செய்கிறார்கள் என்றும், அனைத்து பணிகளையும் முடிக்க சுமார் 250 கோடிக்கு மேல் செலவாகும் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் தான் பாலிவுட் உலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் டாக்காக மாறியுள்ளது.

Sofa Boy ஆடி பாடி கலக்கும் "ஸ்கூல் லீவ் விட்டாச்சு" ஆல்பம் பாடல் !!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்