யாருக்குமே இந்த ஐடியா தோணலையே... கொரோனா வாரியர்ஸுக்கு வில்லன் நடிகரின் மகத்தான உதவி...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 9, 2020, 1:16 PM IST
Highlights

இதையடுத்து இந்தி திரையுலகில் பிரபல வில்லனாக வலம் வரும் சோனு சூட் யாருமே இதுவரை சிந்திக்காத வகையில் அருமையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 194 ஆக அதிகரித்துள்ளது. 167 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஏப்ரல் 14ம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவிற்கு எதிராக போராடி வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏராளமான தொழில் அதிபர்கள், திரைத்துறையினர் உள்ளிட்டோர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மும்பையில் உள்ள தனது 4 மாடி அலுவலகத்தை தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக பயன்படுத்திக்கொள்ளுங்க என பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க: “இதைவிட குட்டை டவுசர் கிடைக்கலையா?”.... யாஷிகா ஆனந்தை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்...!

இதையடுத்து இந்தி திரையுலகில் பிரபல வில்லனாக வலம் வரும் சோனு சூட் யாருமே இதுவரை சிந்திக்காத வகையில் அருமையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆம், இதுவரை தங்களது வீடு, அலுவலகம் உள்ளிட்டவற்றை அரசுக்கு வழங்கியவர்கள் கொரோனா சிகிச்சைக்கு மட்டுமே கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் நம்மையும் நாட்டையும் காக்க தங்களது உயிரை பணயம் வைத்து களம் இறங்கியுள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஓய்வெடுப்பதற்காக மும்பையில் உள்ள தனது 6 மாடி ஓட்டல் ஒன்றை கொடுத்துள்ளார். கொரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதால் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் சரியான தூக்கமின்றி கிடைத்த இடத்தில் தூக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு இந்த உதவி இமயம் அளவிற்கு உயர்ந்ததாகும். 

We need to fight this pandemic together 🙏 thank u sir 🙏 https://t.co/Woakme60jd

— sonu sood (@SonuSood)

இதையும் படிங்க: “முழுசா அவுத்துட்டு போஸ் கொடுத்திருக்கலாம்”... மோசமான உடையில் கன்றாவி போஸ் கொடுத்த மீரா மிதுன்...!

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சோனு சூட், மக்களின் உயிர் காக்க போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் என்னை பொறுத்தவரை கொரோனா வாரியர்ஸ். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வதில் பெருமை அடைகிறேன் என்று கூறியுள்ளார்.  

click me!