நடிகர் கிருஷ்ணாவுடன் சுனைனாவிற்கு திருமணமா? சந்திக்கு வந்த சமாச்சாரம்!

Published : Apr 09, 2020, 01:05 PM ISTUpdated : Apr 09, 2020, 01:07 PM IST
நடிகர் கிருஷ்ணாவுடன் சுனைனாவிற்கு திருமணமா? சந்திக்கு வந்த சமாச்சாரம்!

சுருக்கம்

நடிகைதேவயானியின் சகோதரர், நகுல் கதாநாயகனாக அறிமுகமான 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. இந்த படத்தை தொடர்ந்து, மீண்டும் மாசிலாமணி படத்தில் நகுலுடன் இணைந்து நடித்தார். பின் வம்சம், நீர் பறவை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

நடிகை தேவயானியின் சகோதரர், நகுல் கதாநாயகனாக அறிமுகமான 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. இந்த படத்தை தொடர்ந்து, மீண்டும் மாசிலாமணி படத்தில் நகுலுடன் இணைந்து நடித்தார். பின் வம்சம், நீர் பறவை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

இவர் நடித்த சில படங்கள் வெற்றியடைந்த போதிலும் இவரால் முன்னணி இடத்தை பிடிக்கமுடியவில்லை. இதனால் கதாநாயகி வாய்ப்பை இழைந்து, தெறி போன்ற படங்களில் சிறப்பு வேடத்தில் நடித்தார். மேலும் இவரை தேடி இரண்டாம் நாயகி வாய்ப்புகளே அதிகம் வந்தது.

இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு நடிகர் சமுத்திர கனிக்கு ஜோடியாக நடித்த சில்லு கருப்பட்டி படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இன்றி, ஒரு குடும்ப தலைவியாக இவர் வெளிப்படுத்திய நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டும்  கிடைத்தது.

இந்நிலையில், நடிகை சுனைனாவிற்கும்... நடிகர் கிருஷ்ணாவிற்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக பிரபலம் ஒருவர் கிள்ளி போட்ட திரி புகையாய் மாறி தற்போது திரையுலக வட்டாரத்தில் எரிந்துகொண்டிருக்கிறது. 

விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான 'வன்மம்' படத்தில் சுனைனா கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்திருந்தார். அப்போது தான் இவர்கள் இருவர் நடுவிலும் நட்பு மலர ஆரம்பித்ததாகவும், தற்போது அது வளர்ந்து தகர்க்க முடியாத சுவராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இவர்களுடைய திருமண பேச்சு குறித்து தமிழ் மற்றும் தெலுங்கு மீடியாக்கள் அதிகம் கிசுகிசுத்து வந்தாலும், அதனை இருவருமே கண்டும் காணாதது போல் உள்ளனர். எனினும் தக்க சயமத்தில் இருவருமே இது குறித்த உண்மை தகவலை வெளியிட காத்திருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

நடிகர் கிருஷ்ணா, கடந்த 2017 ஆம் ஆண்டு, தன்னுடைய மனைவி ஹேமலதாவிடம் இருந்து, குடும்ப பிரச்சனை காரணமாக விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!