
பொதுவாக பிரபலங்கள் அணியும் ஆடைகள் பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆன பிறகு அதை அந்த பிரபலங்களின் ரசிகர்களும் வாங்கி அணிந்துகொள்வது பல ஆண்டு காலமாக சினிமா உலகத்தில் உள்ள ஒரு வழக்கம் தான். ஆனால் யாராலும் அணியவே முடியாத அளவில் ஆடைகளை அணிந்து அதன் மூலம் ட்ரெண்டிங் ஆனா நாயகி தான உர்ஃபி ஜாவேத்.
லக்னோவில் பிறந்து இப்பொழுது பாலிவுட் உலகில் ஒரு சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் உர்ஃபி ஜாவேத் பிறர் யாரும் அணிய முடியாத அளவிலான ஆடைகளை அணிந்து பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆனவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவரைப் பற்றி பெரிய அளவில் தெரியவில்லை என்றாலும், நிச்சயம் ரீல்ஸ் போன்ற ஏதோ ஒரு வீடியோவில் இவரை அனைவரும் பார்த்திருப்போம்.
கடந்த 2014வது ஆண்டு ஒளிபரப்பான ஒரு ஹிந்தி நாடகம் மூலம் தனது பயணத்தை தொடங்கிய உர்ஃபி ஜாவேத். இந்த ஆண்டு வெளியான ஒரு பாலிவுட் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இதைத் தாண்டி கைக்கடிகாரம், பூக்கள், சங்கிலி, குண்டூசி போன்று கையில் கிடைக்கும் பொருள்களை எல்லாம் உடைகளாக மாற்றி அதை அணிந்து கொண்டு பொதுவெளியில் போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதன் மூலம் பிரபலமானவர் தான் இவர்.
பல அரசியல் காட்சிகள் இவர் ஆபாசமாக ஆடை அணிவதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருவதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் கடந்த சில நாட்களாகவே இவருடைய முகத்தில் பல மாற்றங்கள் இருந்து வந்த நிலையில் அவருடைய ரசிகர்களுக்கு அது பெரும் வருத்தத்தை கொடுத்தது. சிலர் அவருடைய அதிக மேக்கப் தான் இதற்கு காரணம் என்று கூறி அவரை வறுத்தெடுத்து வந்தனர்.
இந்த சூழலில் அது குறித்து மனம் திறந்துள்ள உர்ஃபி ஜாவேத், தன்னுடைய முகம் குறித்து பலரும் பல விஷயங்களை பலர் பேசிவருவதாகவும். ஆனால் இது தனக்கு அவ்வப்போது இயல்பாக ஏற்படும் அலர்ஜிகள் தான் என்றும் கூறியுள்ளார். 18 வயது முதலிலேயே தனது முகத்தில் Botox மற்றும் பிற அழகு சாதன விஷயங்களை பயன்படுத்தி வரும் தனக்கு அப்பப்போது இது போன்ற முக வீக்கங்கள் ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.