
கொரோனாவின் இரண்டாவது அலை, அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவின் பல்வேறு ஸ்டேட்டில் பொதுமுடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை விட, டெல்லி, மும்பை, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆகிய பகுதிகளில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளதால், திரைப்பட பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவமதித்த தயாரிப்பாளர் யார்...? உண்மையை வெளியிட்ட பிரபல நடிகர்..!
அந்த வகையில், ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கின் தாக்கத்தில் இருந்தே இன்னும் மீண்டு வராதா மக்கள், கொரோனாவின் இரண்டாவது அலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மத்திய - மாநில அரசுகள் ஒருபுறம் உதவி வரும் நிலையில், நடிகர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஏற்கனவே, பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், இந்தி திரையுலகை சேர்த்த 25 ஆயிரம் பேருக்கு தலா 1,500 ரூபாய் வீதம் 3,75,00,000 ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்து தொழிலாளர்கள் மனதை குளிர வைத்துள்ளார். அதை தொடர்ந்து, ஆச்சிஜன் தேவை கொரோனா நோயாளிகளுக்கு மிகவும் முக்கிய தேவையாக இருப்பதால், கொரோனா நோயாளிகளுக்கு சுமார் 500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கியுள்ளார். தற்போது சல்மான் கான் ஆர்டர் செய்துள்ள அனைத்து ஆச்சிஜன் கருவிகளும், மும்பைக்கு வந்து இறங்கியுள்ளது.
மேலும் செய்திகள்: மெல்லிய சேலையை நழுவ விட்டு... பரவசமூட்டும் பாரு..! பார்த்தாலே கிக் ஏற்றும் ஹாட் போட்டோஸ்!
ஆச்சிஜன் தேவை உள்ளவர்கள் குறிப்பிட்ட எண்னை தொடர்பு கொண்டோ... அல்லது மெசேஜ் மூலமாகவோ, உதவி கேட்டால் உடனடியாக அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒவ்வொரு நாளும், கொரோனா நேரத்தில் யாரும் பசியாக இருக்க கூடாது என, உணவு வழங்கி வரும் சல்மான் கான் அதை தாண்டி, ஆச்சிஜன் தேவைக்காக இவர் செய்துள்ள செயல் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.