விண்ணை பிளக்கும் மின்னல்... கையில் ஈட்டியுடன் கெத்து காட்டிய ஜூனியர் என்.டி.ஆர்! பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்!

Published : May 20, 2021, 02:37 PM IST
விண்ணை பிளக்கும் மின்னல்... கையில் ஈட்டியுடன் கெத்து காட்டிய ஜூனியர் என்.டி.ஆர்! பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்!

சுருக்கம்

இந்நிலையில் இன்று ஜூனியர் என்.டி.ஆர் தன்னுடைய 38 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு “ஆர்ஆர்ஆர்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம் சரண், மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் ஹீரோவாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், பாலிவுட் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். சுமார் 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில், விறுவிறுப்பாக இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில்  தாறுமாறு வைரலானது. பின்னர் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, மீண்டும் துவங்கியது. பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்ட போதிலும் சில காட்சிகளே படமாக்க வேண்டியுள்ளது. 

இந்நிலையில் இன்று ஜூனியர் என்.டி.ஆர் தன்னுடைய 38 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. விண்ணை பிளக்கும் மின்னலில் கையில் கெத்தாக ஈட்டியுடன் போஸ் கொடுக்கிறார் ஜூனியர் என்டிஆர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் பிரமாண்டமாக அக்டோபர் 13 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களான அல்லரி சீதராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகி வருகிறது. கொமரம் பீமாக ஜூனியர் என்டிஆர் நடித்து வருகிறார். இவரது கதாபாத்திரம் குறித்த போஸ்டர் தான் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் சிங்கநடை போட வரும் ரஜினி... படையப்பா 2 பற்றி ஹிண்ட் கொடுத்த சூப்பர்ஸ்டார்..!
கிரிஷ் மீது பாசமழை பொழியும் மனோஜ்... ரோகிணி ஹேப்பி; விஜயாவுக்கு ஏறும் பிபி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்