'வலிமை' படத்தில் அவுட் ஸ்டாண்டிங் ஆக்ஷன் காட்சியில் கெத்துக்காட்டிய தல! பிரபல நடிகர் ஓபன் டாக்!

Published : May 20, 2021, 11:04 AM IST
'வலிமை' படத்தில் அவுட் ஸ்டாண்டிங் ஆக்ஷன் காட்சியில் கெத்துக்காட்டிய தல! பிரபல நடிகர் ஓபன் டாக்!

சுருக்கம்

இதைத்தொடர்ந்து, அஜித்தின் தீவிர ரசிகரும், தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியை அடுத்து தல அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ள திரைப்படம் 'வலிமை'. அஜித்தின் 60வது படமாக தயாராகி வரும் இதில், அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக 'காலா' பட நடிகை ஹீமோ குரோஷி நடித்துள்ளார். இந்நிலையில் அஜித் ரசிகர்களின் பல நாள் ஆசையை நிறைவேற்றும் விதமாக 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அஜித் ரசிகர்களை அப்செட் ஆக்கும் விதமாக, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் அறிக்கை ஒன்றை வெளியிறிருந்தார். அதில் "எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாங்கள் கொடுத்த முந்தைய அறிக்கையில் வருகின்ற மே 1ம் தேதி அஜித் குமார் அவர்களின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில், வினோத் இயக்கத்தில், எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம்.

இந்த அறிவிப்பு வெளிவரும் வரை கொரோனா இரண்டாவது அலை வரும் என்றும் அதன் தாக்கம் சுனாமி போல் தாக்கும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர் உயிரிழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கின்றனர். இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள கலைஞர்கள் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்த முடிவின்படி ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றுமொரு தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார். இதனால் அப்டேடுக்காக ஆசையாக கார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதைத்தொடர்ந்து, அஜித்தின் தீவிர ரசிகரும், தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். இதில், 'வலிமை' படத்தில் அஜித் சில அவுட் ஸ்டாண்டிங் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து உள்ளதாகவும், ’வலிமை’ படம் அவரது திரையுலகில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு படமாக என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ’வலிமை’ படம் ரசிகர்களை மீண்டும் ரசிகர்களை திரையரங்குகளுக்கு கொண்டுவரும் ஒரு படமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் இந்த தகவல் அப்டேட்டுக்காக கார்த்திருந்த அஜித் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Movie Theater Etiquette: மூவி பார்க்க தியேட்டர் போறீங்களா? இந்த 10 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!
Nayanthara Fitness: ஜிம், டயட் எதுவுமே இல்லையா? 41 வயதில் நயன்தாராவின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா?