தடுப்பூசி போட்டு கொண்டால் தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் அனுமதி..! ஆர்.கே .செல்வமணி அதிரடி!

By manimegalai aFirst Published May 20, 2021, 1:51 PM IST
Highlights

பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தடுப்பூசிகள் போட்டு கொண்டால் மட்டுமே, நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் முதல் அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர பேராயுதமாக இருப்பது தடுப்பூசிகள் மட்டுமே என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். எனவே தற்போது பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தடுப்பூசிகள் போட்டு கொண்டால் மட்டுமே, நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஒரு நாளைக்கு மட்டும் சுமார், 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முடிந்த வரை பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என அறிவிக்க பட்டுள்ளது. அதை மீறி வெளியில் சுற்றுபவர்களை காவல் துறையினர் அபராதம் விதித்தும், எச்சரித்தும் அனுப்பி வைக்கிறார்கள். மேலும் கோவை போன்ற மாவட்டங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை கண்காணிக்க, ட்ரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் கொரோனா தொற்று கட்டுக்குள் இன்னும் வராத நிலையில், ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பு பணிகளும் தற்போது முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, வரும் 31ஆம் தேதி வரை படம், சீரியல் உள்ளிட்டவற்றின் ஷூட்டிங்,இறுதிக்கட்ட ப்ரொடக்ஷன் வேலைகள் உள்ளிட்டவற்றை நிறுத்திவைக்க FEFSI அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். 31ஆம் தேதி மீட்டிங் நடைபெற்று அதன் பிறகு ஷூட்டிங் நடத்துவதா வேண்டாமா என்ற முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் , தற்போது கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டு கொண்டால் தான் படப்பிடிப்புகளுக்குள், நடிகர் நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனுமதிக்க படுவார்கள் என்றும், உடல் நல பிரச்சனை காரணமாக அவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை என்றால் அதற்கான காரணத்தை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். 

click me!