மோடியும் வேண்டாம் பிஜேபியும் வேண்டாம், அலறியடித்து ஓடிய நடிகர் நடிகைகள்..!! உச்சகட்ட காண்டில் அமித்ஷா ஜி..!!

By Ezhilarasan BabuFirst Published Jan 7, 2020, 12:31 PM IST
Highlights

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொள்ளாமல் பாலிவுட் நடிகர்கள் புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொள்ளாமல் பாலிவுட் நடிகர்கள் புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது .  இது இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டம் எனக்கூறி போராட்டம் தீவிரமடைந்துள்ளது.   இந்நிலையில் இச்சட்டத்தை தங்களது மாநிலத்தில் அனுமதிக்க முடியாது என கேரளம்,  மேற்கு வங்கம் உள்ளிட்ட  மாநிலங்கள் தெரிவித்துள்ளதுடன்  இச் சட்டத்தை எதிர்த்து தங்களது சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 

ஆந்திரா தெலுங்கானா வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் இச்சட்டத்தை தங்களது மாநிலத்தில் அனுமதிக்க முடியாது என போர்க்குரல் எழுப்பி உள்ளனர்.  இந்நிலையில் , இச்சட்டத்தை  பிரபல நடிகர்கள் ஏற்றுக்கொள்வதின் மூலம் அவர்களது ரசிகர்களையும் ஏற்றுக்கொள்ள வைக்க முடியும் என்ற உத்தியில்  பாஜக பாலிவுட் நடிகர்களுக்கு இச்சட்டம் குறித்து விளக்கும் வகையில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்திருந்தது.  அந்த கருத்தரங்கில் பாலிவுட்  மற்றும் மராத்தி சினிமா துறையைச்  சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது  இந்நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொகுத்து வழங்கினார்,  இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகைகள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது . 

இக்கூட்டத்தில்  ஜாவேத் அக்தர் ,  விக்கி கௌஷல் ,  ஆயுஷ்மான் குரானா ரவீனா டான்டன் ,  போனிகபூர் ,  கங்கனா ரனாவத் , மதுர் பந்தர்கர் ,  உள்ளிட்டோர்  கலந்து கொள்வார்கள் என கருதப்பட்டது .  ஆனால் அவர்கள் யாரும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில் அந்த நிகழ்வில்,  பூஷன் குமார்,  ரித்தேஷ் சித்வானி, ரமேஷ் தவுரானி குணால் கோலி, ராகுல் ராவெய்ல் , உள்ளிட்டவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். முக்கிய நடிகர்கள் பலரும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, சமீபத்தில் பிரதமரை சந்தித்த பாலிவுட் நடிகர்கள் அவருடன் செல்பி எடுத்து அதை சமூக வலைதளத்தில் பரப்பு வைரவாக்கினர் ஆனால் தற்போது அழைப்பு விடுத்தும்யாரும் பங்குகொள்ளவில்லை என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!