
'உறுமீன்' படத்தில் ரேஷ்மிமேனனுடன் இணைந்து நடித்த போது, ரேஷ்மி மேனனுக்கும், பாபி சிம்ஹாவிற்கும் காதல் மலர்ந்தது. இந்தக் காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொண்டதால் இவர்கள் காதல் திருமணத்தில் முடிந்தது.
சமீபத்தில் தான் இவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. ஏற்கனவே இவர்கள் இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக பல மூறை தகவல்கள் வெளியானது. பின் அந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க பாபி தான் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிகளில் மனைவியுடன் கலந்துக்கொண்டு முற்றுப் புள்ளி வைத்தார்.
தற்போது பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி இருவருமே படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் நிலையில். மீண்டும் இவர்களுக்குள் பிரச்சனை பெரிய அளவில் வெடித்துள்ளதாகவும். இதன் காரணமாக இவர்கள் இருவரும் விவாகரத்து பெற உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது .
இந்த விவாகரத்து செய்தி எப்படியோ பாபி சிம்ஹா காதுக்கு செல்ல அவரோ, இந்த செய்தியில் உண்மை இல்லை, யாரும் அதை நம்ப வேண்டாம் என்றும் நான் என் மனைவியுடனும் குழந்தையுடனும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.