கிழக்குக் கடற்கரை சாலையில் ஏற்படும் விபத்துகளை மையமாக கொண்டு ஒரு திகில் படம்…

First Published Nov 4, 2017, 10:09 AM IST
Highlights
A horror film centered on accidents on the East Coast Road ...


கிழக்குக் கடற்கரை சாலையில் ஏற்படும் விபத்துகளை மையமாகக் கொண்டு பெண் இயக்குநர் ஒருவர் திகில் படம் .ஒன்றை இயக்குகிறார்.

தமிழ் திரையுலகில் புதிதாக ஜெ.எம்.நூர்ஜஹான் என்ற பெண் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் “கரிக்காட்டுக் குப்பம்” என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் அபிசரவணன், ஸ்வேதா உள்பட பலர் நடிக்கின்றனர்

இந்தப் படத்தை ஆடியன்ஸ் க்ளாப்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜெ.எம்.நூர்ஜஹானே தயாரிக்கிறார்.

கிழக்குக் கடற்கரை சாலையை பிண்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது.

சென்னையில் மிகவும் ஆபத்தான பகுதி என்று சொல்லப்படும் கிழக்குக் கடற்கரை சாலையில் அதிகளவு விபத்துக்கள், பலிகள் நடக்கிறது. இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு “கரிக்காட்டுக் குப்பம்” உருவாகிறது.

இந்தப் படம் திகில் கலந்த சஸ்பென்ஸ் படமாக உருவாகிறது.

ஒரு பெண் இயக்குனர் திகில் படத்தை இயக்குவது தமிழ் திரையுலகில் இதுவே முதல்முறை.

tags
click me!