நடிகை வரலட்சுமிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

 
Published : Mar 05, 2017, 05:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
நடிகை வரலட்சுமிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

சுருக்கம்

birthday wishes for varalakshmi

பிரபல நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான   வரலட்சுமி இன்று தனது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார். 

அவருக்கு தமிழ், மலையாள  சக கலைஞர்கள் நேரிலும், தொலைபேசியிலும், சமூக வலைத்தளத்தின் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

2012ஆம் ஆண்டில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த 'போடா போடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி. 

பின்னர் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தால் பட்டை தீட்டப்பட்டார் வரலட்சுமி. 'தாரை தப்பட்டை' படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் இந்த படத்தில் வரலட்சுமியின் நடிப்பை பாராட்டாத ஊடகங்களே இல்லை என்று கூறலாம்

தற்போது 'நிபுணன்', 'அம்மாயி', 'சத்யா', 'விக்ரம் வேதா' ஆகிய படங்களில் நடித்து பிசியான நடிகைகளில் ஒருவராக இருக்கும் வரலட்சுமி நடிப்பு மட்டுமின்றி சமூக சிந்தனையும் நிறைந்தவர். சமீபத்தில் நடிகை பாவனாவுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்த வரலட்சுமி, நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்காக 'சேவ் சக்தி' என்ற அமைப்பை தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இவருக்கு நியூஸ் பாஸ்ட் சர்ர்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!