
உலகம் முழுவதும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது.
இந்த விழாவை மேலும் சிறப்பிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி சார்பாக 11ம் தேதி ஒரு விழாவினை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி பொதுச்செயலாளர் நக்மாவிற்கு அழைப்பு விடுக்கபட்டு, அவரும் தான் வருவதாக ஒப்புக்கொண்டார்.
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் நடிகை கே.ஆர்.விஜயா , ஜெயசித்ரா , நடிகை மீனா ஆகியவர்களுகம் அழைக்கப்பட்டு அங்குஅவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையின் விருது வழங்கும் விழாவிற்கும் ஏற்பாடு செய்திருந்தார் முன்னாள் எம்.எல்.ஏ.யசோதா.
அதே போல் என்ன விருதுகள் வழங்க உள்ளோம் என்கிற அறிவிப்பையும் அறிவித்தார். அதில் நடிகை மீனாவிற்கு இந்திரா காந்தியின் பெயரில் விருது வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை கேள்விப்பட்ட நடிகையும் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி பொதுச்செயலாளர் நக்மா... மீனாவிற்கு இந்த விருது பெறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது அவர் அப்படி என்ன தியாகம் செய்துவிட்டார் என பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த விருது அவருக்கு தருவதாக இருந்தால் தன்னால் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாது என அதிரடியாக தெரிவித்துள்ளார் நக்மா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.