முதலமைச்சர் வாழ்க்கை வரலாற்றை படம் எடுக்கும் முயற்சியில் பிரபல இயக்குனர்.....!!!

Asianet News Tamil  
Published : Oct 24, 2016, 07:08 AM ISTUpdated : Sep 19, 2018, 03:17 AM IST
முதலமைச்சர் வாழ்க்கை வரலாற்றை படம் எடுக்கும் முயற்சியில் பிரபல இயக்குனர்.....!!!

சுருக்கம்

சமீப காலமாக பிரபலமானவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படங்கள் எடுத்து வெற்றி பெறும் சீசன் இந்திய திரையுலகில் தற்போது டிரெண்ட் ஆக இருந்து வருகிறது. 

அந்த வரிசையில் சில்க் ஸ்மிதா, மேரிகோம், தோனி, உள்பட பல பிரபலமானவர்களின் திரைப்படங்கள் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. 

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறும் விரைவில் திரைப்படம் ஆகவுள்ளது என்பது நாம் அறிந்தது தான்.
 
இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் உருவாக பாடுபட்ட அம்மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகரராவ் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க பிரபல இயக்குனர் மதுரா ஸ்ரீதர் முயற்சித்து வருகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
 
மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா ஆகிய தலைவர்களின் வாழ்க்கையை போல சந்திரசேகரராவ் அவர்களின் வாழ்க்கையும் போராட்டம் நிறைந்தது என்றும்.

அவருடைய வாழ்க்கை வரலாறை இக்கால இளைஞர்கள் மட்டுமின்றி எதிர்கால சந்ததியினர்களும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் இயக்குனர் மதுரா ஸ்ரீதர் கூறியுள்ளார்.
 
இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இனி பேச்சு இல்ல; வீச்சு தான்... களத்தில் குதித்த குணசேகரன்; கதறப்போகும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
அடித்தாரா கம்ருதீன்? ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சாண்ட்ரா - பின்னணி என்ன?