
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் கொடுக்கப்பட்ட துணிதுவைக்கும் டாஸ்கில், சினேகன் அணியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதன் மூலம் அவர்கள் அணியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் பிக் பாஸ் 450 பாயிண்ட்ஸ் கொடுத்து அதற்கு ஏற்றாப்போல் பொருட்கள் வாங்கி கொள்ளுமாறும் கூறப்பட்டது.
சினேகன் அணியை சேர்ந்தவர்கள் மட்டும் தங்களுக்கு பிடித்த பொருட்களை கொடுக்கப்பட்ட பாய்ட்ஸ்களுக்குள் தேர்வு செய்தனர். அப்போது நடிகை பிந்து மாதவி காபி பவுடர் அதில் போடும் படி கூறுகிறார். அதற்கு ரைசா ஐஸ் கிரீம் வேண்டும் என கூறுகிறார்.
இறுதியில் பிந்துவின் பேச்சை உதாசின படுத்திவிட்டு, ரைசாவை பேச்சை கேட்கின்றனர். இதனால் ஆத்திரப்படும் பிந்து, அனைவர் மத்தியிலும் தன்னுடைய பேச்சுக்கு எந்த மரியாதையும் கொடுக்கப்பட வில்லை என கூறுகிறார் இதற்கு ரைசா காரணம் கூற எனக்கு எந்த ஒரு விளக்கமும் தேவை இல்லை என மிகவும் கோபமாக கூறுகிறார்.
பின் ரைசா இதை ஒரு பிரச்சனையாக அனைவரிடமும் கூறுவது போல் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.