
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் நடிகை நமீதா, இவருக்கு தற்போது அதிகப்படியான பட வாய்ப்புகள் இல்லாததால் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதாக கூறப்பட்டது.
இவருக்கு அதிகப்படியான இளைஞர்கள் ரசிகர்களாக உள்ளதாலும் இவர் மற்றவர்களைவிட தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறியப்பட்டவர் என்பதாலும் இவர் இந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டவர்.
ஆரம்பத்தில் நல்ல நமிதாவாக இருந்த இவர், காயத்ரி, சக்தி, என மற்றவர்களுடன் இணைந்து ஓவியா மற்றும் அனைவரையும் மிகவும் கேவலமாக பேசினார். இவருடைய நடவடிக்கைகள் ஒரு நிலையில் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது.
இதன் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களால் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று உள்ள நமீதா அங்கு, எடுத்த புகைப்படத்தை, சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ஓவியா ரசிகர்கள் " நீங்கள் அங்கேயே இருந்து விடுங்கள் தமிழகம் பக்கம் தயவு செய்து வர வேண்டாம் என கூறியுள்ளனர்" . அதே போல பலர் நமிதாவை வார்த்தைகளால் தாக்கியும் அவருக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். நமீதா நடந்துகொண்ட விதம் தவறாக இருந்தாலும் இது ஒரு போட்டியாக எடுத்துக்கொள்ளுங்கள் என கமலஹாசன் கூறியும் ரசிகர்கள் அவருக்கு இப்படி தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.